Connect with us

ரெண்டு வருஷமாக வீட்டு வாசலிலேயே நின்ற இளைஞன்!.. அவனுக்கு உதவி செய்த பாக்கியராஜ்..

sembuli jagan bagyaraj

Cinema History

ரெண்டு வருஷமாக வீட்டு வாசலிலேயே நின்ற இளைஞன்!.. அவனுக்கு உதவி செய்த பாக்கியராஜ்..

cinepettai.com cinepettai.com

Tamil actor bhagyraj: தமிழ் சினிமாவில் உதவி இயக்குனர்களுக்கு எக்கச்சக்கமாக வாய்ப்பு கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். கிராமத்திலிருந்து சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பாக்கியராஜ் பாரதிராஜா மூலமாக உதவி இயக்குனராக பணியாற்ற துவங்கினார்.

அதன் பிறகு தனியாக படம் எடுக்க ஆசைப்பட்ட பாக்கியராஜ், தனியாக வந்து இயக்குனர் ஆனார். இதனால் கிராமங்களில் இருந்து பலரும் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வருவதை அறிந்த பாக்யராஜ் முடிந்தவரை அவர்களுக்கு உதவி செய்ய தொடங்கினார். இவர் இயக்குனராக இருந்த பொழுது பலருக்கும் உதவி இயக்குனராக வாய்ப்புகளை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் இதே போல கிராமத்திலிருந்து இயக்குனராக வேண்டும் என்று கிளம்பி வந்தவர்தான் செம்புலி ஜெகன். செம்புலி ஜெகன் சென்னைக்கு வந்த பிறகு அவர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். எனவே அவர் பாக்கியராஜின் வீட்டிற்கு முன்பு போய் தினமும் நின்று கொண்டே இருந்தார்.

இப்படியாக இரண்டு வருடங்கள் தொடர்ந்து பாக்யராஜின் வீட்டு வாசலில் போய் நின்றார். அதனைப் பார்த்த பாக்கியராஜ் யார் இவர் தினமும் நமது வீட்டு வாசலில் நிற்கிறார் என யோசித்து விட்டு அவரை அழைத்துள்ளார் அழைத்து அவரிடம் பேசிய பொழுது அவர் உங்களிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்பதே என் ஆசை என்று கூறியிருக்கிறார்.

ஆனால் அப்போது ஏற்கனவே பாக்யராஜிடம் 25 உதவி இயக்குனர்கள் இருந்தனர். இந்த நிலையில் புதிதாக உன்னை எப்படி சேர்த்துக் கொள்ள முடியும் என்று கூறிய பாக்கியராஜ் முதலில் சினிமாவை குறித்து சில விஷயங்களை கற்றுக் கொள் என்று கூறி அவருக்குத் தெரிந்த வீடியோ எடிட்டிங் செய்யும் இடத்தில் செம்புலி ஜெகனை சேர்த்து விட்டார்.

அதன் பிறகு அனைத்தையும் கற்றுக்கொண்ட செம்புலி ஜெகனை திரும்ப தன்னுடன் உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டார். ராசுகுட்டி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் செம்புலி ஜெகன் நடித்திருப்பார்.

POPULAR POSTS

ilayaraja
rajini lokesh kanagaraj
sundar c kushboo
deva
vijay rajinikanth
pugazh vengatesh bhatt
To Top