ராஜ மெளலி, மணிரத்னத்தை எல்லாம் ஓரங்கட்ட போறாரோ? – பெரும் நட்சத்திரங்களை படத்தில் இறக்கிய ஷங்கர்.!

இயக்குனர் சங்கர் என்றாலே பெரும் பட்ஜெட் படம் என அனைவருக்கும் நினைவு வரும். தமிழில் அதிக தொகையை வசூல் செய்த திரைப்படம் இயக்குனர் சங்கரின் 2.0 திரைப்படமாகும். இந்த படம் 800 கோடிக்கு ஓடியதாக கூறப்படுகிறது

இன்று வரை வேறு எந்த தமிழ்படமும் இந்த வசூலை ப்ரேக் செய்யவில்லை. ஆனால் கர்நாடாகவில் எடுக்கப்பட்ட கே.ஜி.எஃப் மற்றும் தெலுங்கு படமான ஆர்.ஆர்.ஆர் ஆகிய திரைப்படங்கள் 1000 கோடியை கடந்து வசூல் குவித்தது.

இந்நிலையில் இவர்களை விஞ்சும் வகையில் ஒரு கதையை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் சங்கர். பொன்னியின் செல்வன் போலவே தமிழ் வாசகர்கள் இடையே பிரபலமாக இருக்கும் நாவல் சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி.

மூவேந்தர்களே தோற்கடிப்பதற்கு போராடிய பாரி மன்னனை பற்றி வரலாற்று கதையான இந்த நாவலை சங்கர் திரைப்படமாக்க உள்ளார். இந்த படத்தை 1000 கோடி செலவில் எடுக்க உள்ளாராம் சங்கர்.

இதனால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கே.ஜி.எஃப் யஷ், ராம்சரண், ரன்வீர் சிங், சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளத்தையே சங்கர் இறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகப்பட்சம் வேள்பாரியாக சூர்யா நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Refresh