Connect with us

பிரபல நடிகைக்கிட்ட கடலை போட்ட சாந்தனு… புருஷன் வந்ததும் எஸ்கேப்பு.. என்னப்பா சொல்றீங்க!..

Cinema History

பிரபல நடிகைக்கிட்ட கடலை போட்ட சாந்தனு… புருஷன் வந்ததும் எஸ்கேப்பு.. என்னப்பா சொல்றீங்க!..

Social Media Bar

1998 இல் வெளியான வேட்டிய மடிச்சி கட்டு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகர் சாந்தனு. அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு வெளியான சக்கரக்கட்டி திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார்.

வெகு காலமாக தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிப்பதற்காக போராடி வருகிறார் சாந்தனு. சாந்தனு நடித்த படங்களில் கண்டேன், பாவ கதைகள் போன்ற சில படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகின. இடையில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் பார்கவ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்சமயம் பேட்டி ஒன்றில் பேசியிருந்த சாந்தனு சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பகிர்ந்திருந்தார். சாந்தனுவிற்கு நடிகை ஜெனிலியாவை மிகவும் பிடிக்கும். அவருடன் ஒரு படத்திலாவது நடித்திட வேண்டும் என ஆசைப்பட்டார் சாந்தனு.

ஆனால் அதற்கான வாய்ப்புகள் என்பது அமையவே இல்லை. அதற்குள் ஜெனிலியாவிற்கு திருமணமாகிவிட்டது. எனவே அவர் சினிமாவை விட்டு விலகிவிட்டார். என்றாவது ஒரு நாள் அவரை நேரிலாவது சந்தித்திட வேண்டும் என்று நினைத்தார் சாந்தனு.

இந்த நிலையில் ஒருமுறை ஐ.பி.எல் கிரிக்கெட் பார்க்க சென்றபோது அங்கே ஜெனிலியாவை பார்த்துள்ளார் சாந்தனு. உடனே ஜெனிலியாவிடம் சென்று பேசலாம் என நினைத்துள்ளார். ஆனால் ஜெனிலியாவிற்குதான் சாந்தனு யார் என்றே தெரியாதே?  பிறகு எப்படி பேசுவது என யோசித்துள்ளார் சாந்தனு.

அப்போதுதான் உத்தம புத்திரன் திரைப்படத்தில் அவரது தந்தை பாக்கியராஜ் ஜெனிலியாவுடன் சேர்ந்து நடித்தது நியாபகம் வந்துள்ளது. நேரடியாக ஜெனிலியாவை சந்தித்து பேசிய சாந்தனு, பாக்கியராஜின் மகன்தான் நான் என தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். பிறகு வெகுநேரம் அவருடன் பேசியுள்ளார்.

ஆனால் அதை ஓரமாக நின்று ஜெனிலியாவின் கணவர் ரித்திஷ் பார்த்துக்கொண்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை. ரித்திஷ் சாந்தனுவை முறைத்து பார்த்துள்ளார். அதை பார்த்தவுடன் அங்கிருந்து நகர்ந்துள்ளார் சாந்தனு. இதை அவர் தனது பேட்டியில் கூறியிருந்தார்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top