News
வரவேற்பை பெறும் ஷாருக்கானின் பதான் – தீப்பறக்கும் ட்ரைலர்
பாலிவுட் நடிகர் என்றாலும் கூட நடிகர் ஷாருக்கானுக்கு அதிகமான அளவில் தமிழ் நாட்டிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் நடித்து மணிரத்னம் இயக்கிய உயிரே திரைப்படம் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சையமானவர் ஷாருக்கான்.

அதற்கு பிறகு ரா ஒன், சென்னை எக்ஸ் ப்ரஸ் என இவரது பல திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வரவேற்பை பெற்றுள்ளன.
தற்சமயம் ஷாருக்கான் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம்தான் பதான். இந்த படத்தில் ஒரு சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார் ஷாருக்கான். ஷாருக்கானுக்கு வில்லனாக ஜான் ஆபிரகாம் நடித்துள்ளார். படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக அதிக கவர்ச்சியில் தீபிகா படுகோனே நடித்துள்ளார்.
இந்த படம் தமிழிலும் கூட வெளியாக உள்ளது. படம் முழுக்க சண்டை காட்சிகள் இருப்பது தெரிகிறது. அஜித் நடித்த விவேகம் படத்தை போல இருக்கலாம் என பேசப்படுகிறது.
அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வருகிற ஜனவரி 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் தமிழ் ட்ரைலர் தற்சமயம் வெளியாகியுள்ளது.
வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்
