Tamil Cinema News
இந்தியன் 4க்கு எங்கக்கிட்ட ப்ளான் இருக்கு.. குண்டை தூக்கி போட்ட சித்தார்த்..! இவங்க இன்னும் திருந்தல மாமா..!
தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை என்னதான் ஒரு நடிகர் பெரிய ஹீரோவாக இருந்தாலும் கூட அவர் சரியாக ஒரு படத்தில் நடிக்கவில்லை என்றால் அந்த திரைப்படத்தை பார்க்க மாட்டார்கள்.
அது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அதுதான் நிலைமை. அதனால்தான் ரஜினி, விஜய், கமல்ஹாசன் மாதிரியான பெரிய நடிகர்கள் கூட ஒவ்வொரு திரைப்படத்தையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடிக்கின்றனர்.
அதேபோல அவர்களுக்கு தோல்வி படங்கள் என்பதும் அமைவதற்கு இதுதான் காரணமாக இருக்கிறது. பொதுவாக தெலுங்கு, ஹிந்தி, போன்ற மொழிகளில் இப்படி கிடையாது பெரிய நடிகர் என்று அவரது திரைப்படத்தை பார்த்து வெற்றி கொடுத்து விடுவார்கள்.
இந்தியன் நான்கின் கதை:
ஆனால் தமிழில் அப்படி கிடையாது அப்படியாக கமல்ஹாசனுக்கு சமீபத்தில் பெரும் தோல்வியை கொடுத்த படமாக இந்தியன் 2 திரைப்படம் இருந்தது லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அதிக பொருட் செலவில் உருவான திரைப்படம் இந்தியன் 2.
இந்த திரைப்படத்தின் தோல்வியை அடுத்து இந்தியன் 3 திரைப்படத்தை எப்படியாவது விற்பனை செய்து விட வேண்டும் என்பது லைகாவின் எண்ணமாக இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து பேசிய நடிகர் சித்தார்த் கூறும் பொழுது இந்தியன் 3 திரைப்படம் நல்ல வெற்றியை கொடுக்கும்.
ஆனால் நான் இந்தியன் படத்தின் நான்காவது பாகத்திற்கு தான் அதிகமாக காத்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் அந்த திரைப்படத்தின் கதை இதைவிட சிறப்பாக இருந்தது என்று கூறுகிறார் சித்தார்த். இதை வைத்து இந்தியன் திரைப்படத்தின் நான்காம் பாகம் வேறு வர இருக்கிறதா என்று கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.