3 படத்துலயும் மாறி மாறி நடிக்கணும்.. சிவகார்த்திகேயனுக்கு வந்த பிரச்சனை.!
அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்புகள் அதிகரித்துள்ளன. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக வரவேற்புகளை பெற துவங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். தற்சமயம் ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்த திரைப்படமும் ராணுவம் தொடர்பான திரைப்படம் என பேச்சுக்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் நடிகர் விஜய்யை பேட்டி எடுத்தவர் சிவகார்த்திகேயன். துப்பாக்கி படத்திற்கு செல்லும்போது அதை புகைப்படம் எடுத்து பதிவிட்டவர்.
அப்படிப்பட்ட சிவகார்த்திகேயன் துப்பாக்கி படத்தின் இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்திலேயே நடிக்கிறார் என்பது பெரிய விஷயமாகும். இந்த நிலையில் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார் சிவகார்த்திகேயன்.

பல படங்களில் வாய்ப்பு:
இதனால் ஏ.ஆர் முருகதாஸ், சிபி சக்ரவர்த்தி, சுதா கொங்காரா ஆகிய மூவரது திரைப்படத்திலும் ஒரே சமயத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். சுதா கொங்காரா திரைப்படத்தை பொறுத்தவரை அதில் சிவகார்த்திகேயனின் கெட்டப்பில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மற்ற இரு படங்களிலும் வேறு கெட்டப் உள்ளதால் முகத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது என உறுதியாக கூறிவிட்டாராம் சிவகார்த்திகேயன். எனவே தற்சமயம் இது சுதா கொங்காரா திரைப்படத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.