Tamil Cinema News
விஜய்க்கு எதிராக ரஜினியின் ஆட்டம்.. இதுதான் அவரது திட்டமா?.
பல வருடங்களாகவே நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு தமிழ்நாட்டு அரசியலில் கால் பதிக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்து வந்தது. பல முறை அரசியலுக்கு வருவதாக அறிவித்தும் கூட இறுதி வரை அவர் அரசியலுக்கு வரவே இல்லை.
கடைசியில் அரசியலில் இருந்து பின்வாங்கி விட்டார் ரஜினிகாந்த். இந்த நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்து தனது கட்சியையும் வெற்றிகரமாக துவங்கி விட்டார். அதுமட்டுமன்றி மாநாடு ஒன்றையும் சிறப்பாக நடத்திவிட்டார்.
விஜய்க்கு எதிராக ரஜினி:
இந்த நிலையில் இதுகுறித்து பிரபல சினிமா பத்திரிகையாளரான அந்தணன் கூறும்பொழுது கண்டிப்பாக விஜய்யின் இந்த வளர்ச்சி ரஜினிக்கு பிடிக்காது. சொல்ல போனால் ரஜினி மறைமுகமாக விஜய்யை எதிர்த்து கொண்டு தான் இருக்கிறார்.
தொடர்ந்து திரும்பவும் அரசியலில் வந்து விஜய் ரஜினி எதிர்ப்பது என்பது நடக்காத காரியம். ஏனெனில் ஏற்கனவே ரஜினி அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறிவிட்டார். இப்பொழுது திரும்ப வந்தார் என்றால் அவரை பலரும் கேலியாக பார்ப்பார்கள்.
மேலும் ஒரு சினிமா பிரபலத்திற்கு அரசியல் என்பது முக்கிய தேவையாக இருக்கிறது. சினிமாவில் கிடைக்கும் புகழை விட அரசியலில் அதிகப் புகழ் கிடைக்கும். அப்படி இருக்கும் பொழுது ரஜினி அதை விடமாட்டார் எனவே மறைமுகமாக அரசியல் செய்வது ரஜினியின் யோசனையாக இருக்கும் என்று இதைப்பற்றி கூறியிருக்கிறார் அந்தணன்.