அதுல ஏதாவது நியாயம் இருக்கா சொல்லுங்க.. சூர்யா ஜோதிகா காதல் குறித்து சிவக்குமாரே சொன்ன விஷயம்.!

தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு சில பிரபலங்களில் மிக முக்கியமானவர்கள் சூர்யா ஜோதிகா பிரபலங்கள். வெகு வருடங்களாகவே சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து அதற்குப் பிறகுதான் திருமணம் செய்தனர்.

தற்சமயம் மும்பையில் செட்டிலாகி இருக்கும் ஜோதிகா அங்கேயே தனது பிள்ளைகளையும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஜோதிகாவிற்கும் சூர்யாவிற்கும் நிறைய தடைகளை மீறிதான் திருமணம் நடந்தது.

முக்கியமாக சூர்யாவின் வீட்டில் ஜோதிகாவை மருமகளாக ஏற்றுக் கொள்ளவே இல்லை சிவகுமார்.  இதற்கு அவர் அதிகம் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு பிறகு விடாப்படியாக இருந்துதான் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

surya jyothika
surya jyothika
Social Media Bar

இந்த நிலையில் சிவகுமாரிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சிவகுமார் கூறும் பொழுது திரைப்படங்களில் நடிக்கும் பொழுது காதலுக்கு ஆதரவான காட்சிகள் இருந்தால் நடிப்போம். ஒரு 100 150 காதல்களை யாவது திரைப்படத்தில் பார்த்திருப்பேன்.

அப்படி இருக்கும்பொழுது எனது மகன் செய்யும் ஒரு காதலை நான் எப்படி எதிர்க்க முடியும். அது மட்டுமல்லாமல் அவர்களும் மிக உறுதியாக இருந்தனர் சூர்யாவும் ஜோதிகாவும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தனர்.

அப்படிப்பட்ட அவர்களை எப்படி நாம் பிரிக்க முடியும் என்று கூறியிருக்கிறார் சிவகுமார்.