Connect with us

பொன்னியின் செல்வன் நடிகையை கரம்பிடித்த நாக சைதன்யா!.. சினிமால இதெல்லாம் சகஜம்!.

naga chaitanya

Actress

பொன்னியின் செல்வன் நடிகையை கரம்பிடித்த நாக சைதன்யா!.. சினிமால இதெல்லாம் சகஜம்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் நமக்கு பிடித்த நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் சமீபத்தில் அனைவருக்கும் பிடித்த ஜோடியாக இருந்து வந்தவர்கள் நாக சைதன்யா மற்றும் சமந்தா.

இவர்கள் இருவரும் காதலித்து இரு விட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பிறகு இருவரும் பிரிந்த நிலையில் தற்போது நாக சைதன்யா இரண்டாவதாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த சோபிதா துலிபாலாவை திருமணம் செய்ய இருக்கிறார். அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளிவந்து தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாக சைதன்யாவின் முதல் திருமணம்

நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் கடந்த 7ஆண்டுகளாக காதலித்து இரு விட்டார் சம்மதத்துடனும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

samantha

ஆனால் திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற போவதாக அறிவித்தனர். நாங்கள் இருவரும் மனம் ஒத்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். அதனால் யாரும் எங்களை விமர்சிக்க வேண்டாம் என இருவரும் வேண்டுகோள் விடுத்து இருந்தார்கள்.

இந்நிலையில் சமந்தாவும் அவரின் வேலையைப் பார்க்க, நாக சைதன்யா பொன்னியின் செல்வன் நடிகையுடன் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கினார். தற்பொழுது அது நிஜமாகும் வகையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது.

நாக சைதன்யா மற்றும் சோபிதா நிச்சயதார்த்தம்

தற்போது நாக சைதன்யா மற்றும் சோபிதா நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவர்களது திருமணம் கூடிய விரைவில் நடைபெறப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

naga chaithanya

நாக சைதன்யா முன்னதாக நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டு பிரிந்து இருந்த நிலையில் தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை சோபிதாவை கரம் பிடிக்க இருக்கிறார். மேலும் இதனைநாக சைதன்யாவின் அப்பா நாகர்ஜுனா உறுதிப்படுத்தி இருக்கிறார்.

naga chaithanya

ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் இல்லத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. முன்னதாக இருவரும் காதலித்து வருவதாக தகவல் கூறப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது.

மேலும் இந்தாண்டு இறுதிக்குள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top