Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
செல்வராகவனுக்கு ஓ.கேன்னா மீண்டும் இணைய தயார்! – சிக்னல் கொடுத்த சோனியா அகர்வால்!

செல்வராகவனுக்கு ஓ.கேன்னா மீண்டும் இணைய தயார்! – சிக்னல் கொடுத்த சோனியா அகர்வால்!

by yugen
February 11, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் கடந்த 2003ம் ஆண்டில் வெளியான ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சோனியா அகர்வால் அதன் பின்னர் கோவில், மதுர, 7ஜி ரெயின்போ காலனி என பல ஹிட் படங்களில் நடித்தார்.

தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை என செல்வராகவன் படத்தில் சோனியா அகர்வால் நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த பந்தம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2006ல் திருமணம் செய்து கொண்ட அவர்கள் 4 ஆண்டுகளில் விவகாரத்தும் செய்து கொண்டனர்.

Read More:  விஜய் மறுத்த அந்த 'ஆங்கில' வசனங்கள் - கௌதம் மேனனின் 'யோகன்: அத்தியாயம் ஒன்று' நின்றதன் பின்னணி இதுதான்!

அந்த சமயங்களில் ஆக்டிவாக படம் இயக்கி வந்த செல்வராகவன் இடையே படம் இயக்குவதில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் தற்போது பல படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வரும் செல்வராகவன் மீண்டும் படங்களை இயக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே இவரது இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தனுஷை வைத்து இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

அதை தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலணி படமும் இரண்டாம் பாகம் வருவதாக பேசிக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் செல்வராகவன் எக்ஸ் தளத்தில் ‘புதுப்பேட்டை’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலையை விரைவில் தொடங்க உள்ளதாக பதிவிட்டிருந்தார்.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

மீண்டும் தனுஷ், ஸ்னேகா உள்ளிட்ட புதுப்பேட்டையில் நடித்த நடிகர், நடிகைகளை கொண்டு இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கொக்கி குமாரின் மனைவியாக சோனியா அகர்வால்தான் நடித்திருந்தார். ஆனால் விவாகரத்துக்கு பின்னர் செல்வராகவன் படங்களில் சோனியா அகர்வால் நடிக்கவில்லை. இந்நிலையில் புதுப்பேட்டை 2 வந்தால் அதில் சோனியா அகர்வால் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் சோனியா அகர்வாலிடமே கேட்டபோது “புதுப்பேட்டை 2 படத்தில் நடிக்க அழைத்தால் நடிப்பேன். நடிப்பு என்னுடைய தொழில். செல்வராகவனோடு சேர்ந்து வேலை செய்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இதுவரை புதுப்பேட்டை 2 படத்தில் நடிக்க வேண்டும் என அழைப்பு வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

இதனால் சோனியா அகர்வால் அந்த படத்தில் நடிக்க விருப்பமாய் இருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் செல்வராகவன் அவரை நடிக்க அழைப்பாரா? செல்வராகவன் – தனுஷ் – சோனியா அகர்வால் காம்போ மீண்டும் தமிழ் சினிமாவில் கலக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags: selvaragavantamil cinemaசெல்வராகவன்சோனியா அகர்வால்தமிழ் சினிமாபுதுப்பேட்டை 2
Previous Post

இதெல்லாம் தெரிஞ்சா இங்க ஹீரோயின் ஆக முடியாது!.. அனுஷ்காவில் துவங்கி அனைத்து நடிகைகளையும் வச்சி செய்த நடிகை ஆர்த்தி!..

Next Post

தனுஷை நிராகரித்துவிட்டு ரஜினிகாந்த் போய் நடித்த படம்!.. கடைசியில் படுதோல்வி!.. என்ன இப்படி ஆயிடுச்சு!..

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
dhanush rajinikanth

தனுஷை நிராகரித்துவிட்டு ரஜினிகாந்த் போய் நடித்த படம்!.. கடைசியில் படுதோல்வி!.. என்ன இப்படி ஆயிடுச்சு!..

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved