Connect with us

தேவைப்பட்டால் எல்லத்தையும் இணையத்தில் போடுவேன்.. ரச்சிதா மகாலெட்சுமிக்கு வார்னிங் கொடுத்த இயக்குனர்!..

rachita

Latest News

தேவைப்பட்டால் எல்லத்தையும் இணையத்தில் போடுவேன்.. ரச்சிதா மகாலெட்சுமிக்கு வார்னிங் கொடுத்த இயக்குனர்!..

Social Media Bar

விஜய் டிவி மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலெட்சுமி. இவர் நிறைய சீரியல்களில் நடித்துள்ளார். அதில் முக்கியமான சீரியல் என்றால் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியலை கூறலாம்.

அந்த சீரியலில் சரவணனாக கவினும் மீனாட்சியாக ரச்சிதாவும் நடித்துள்ளார். இது இல்லாமல் நிறைய சீரியல்களில் இவர் நடித்துள்ளார். வேறொரு சீரியலில் இவருடன் இணைந்து நடிகர் தினேஷ் நடித்திருந்தார்.

ரச்சிதா எண்ட்ரி:

பிறகு இவர்கள் இருவருக்கும் காதல் உண்டானது. அதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் பிறகு அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர்.

அதற்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார் நடிகை ரச்சிதா. பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஓரளவு வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து பிரபலமானார் ரச்சிதா மகாலெட்சுமி.

தற்சமயம் திரைத்துறையிலும் இவர் முயற்சித்து வருகிறார். திரைத்துறையில் பட வாய்ப்புகளை பெறுவதற்காக பல்வேறு இயக்குனர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் வாய்ப்பு கேட்டு வருகிறார்.

படத்தில் வந்த பிரச்சனை:

இந்த நிலையில் ஃபயர் என்கிற ஒரு திரைப்படத்தில் ரச்சிதா கதாநாயகியாக நடித்துள்ளார். தற்சமயம் இந்த படம் குறித்து தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் ஃபயர் படத்தை விமர்சித்துள்ளார். அதில் பாலாஜி முருகதாஸ் என்பவர் ஃபயர் படக்குழுவினர் தனக்கு சம்பளமே கொடுக்கவில்லை என கூறியிருந்தார்.

அதை பகிர்ந்த ரச்சிதா. உங்களுக்கு இப்போதுதான் இது தெரிகிறது. நான் முன்பே இவர்கள் ஏமாற்று வேலை அறிந்து பின்வாங்கிவிட்டேன். ஆனாலும் பரவாயில்லை. எனக்கு துணைக்கு ஆள் கிடைத்துவிட்டது என அவர் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த இயக்குனர் ஜே.எஸ்.கே சதீஸ். வணக்கம் ரச்சிதா நீங்க இனாமா நடித்து கொடுக்கல. நீங்க எங்கிட்ட பணம் வாங்குனதுக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு. அதை தேவைபட்டால் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என எச்சரிக்கை கொடுத்துள்ளார் இயக்குனர்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top