Netflix ஓடிடி தளத்தில் பிரபலமாக இருந்து வரும் பல சீரியஸ்களில் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் முக்கியமான ஒரு சீரிஸ் ஆகும்.
ஒரு சின்ன கிராமத்தில் நடக்கும் மர்மமான விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சீரியஸின் கதைகளம் துவங்கியது. போகப் போக அதன் பிரம்மாண்டம் என்பது அதிகரிக்க துவங்கியது.
மேலும் அந்த கிராமத்தில் நடக்கும் அவ்வளவு மர்மமான விஷயங்களையும் ஐந்து சிறுவர்களை கொண்ட ஒரு குழு கண்டறிவதாக கதையின் களம் செல்லும். இந்த நிலையில் இறுதியாக வந்த நான்காவது சீசனில் மொத்த கிராமமும் இந்த மர்ம விஷயத்தில் சிக்கிக் கொண்டதாக கதை முடிந்திருந்தது.
அதற்குப் பிறகு இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்சமயம் இதன் ஐந்தாவது சீசன் வெளிவர இருக்கிறது. இதன் ட்ரெய்லர் இப்பொழுது வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஐந்தாவது பாகம் மட்டுமே மூன்று தேதிகளில் வெளியாக இருக்கிறது.
நவம்பர் 26 இல் பாதி எபிசோடுகளும் பிறகு கிறிஸ்மஸின் பொழுது பாதி எபிசோடுகளும் வழியாக இருக்கிறது. இது இல்லாமல் கடைசி எபிசோடு மட்டும் புத்தாண்டுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.