Connect with us

ராக்கி பாய், நெடுமாறன் கலந்த கலவை..? – சுதா கொங்கராவின் ப்ளான் என்ன?

News

ராக்கி பாய், நெடுமாறன் கலந்த கலவை..? – சுதா கொங்கராவின் ப்ளான் என்ன?

Social Media Bar

பிரபலமான கேஜிஎஃப் படத்தை தயாரித்த நிறுவனத்தின் அடுத்த படத்தில் தமிழ் இயக்குனர் சுதா கொங்கரா ஒப்பந்தமாகியுள்ளார்.

Sudha Kongara
Sudha Kongara

கன்னடத்தில் வெளியாகி உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ள படம் கேஜிஎஃப். இதன் இரண்டு பாகங்களையும் கன்னட பட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரித்திருந்தனர். கேஜிஎஃப் 2 தற்போது பல்வேறு இந்திய மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க : இடியின் கடவுள் திரும்ப வந்துட்டார்… ஆனா வேற மாறி..? – Thor love and Thunder டீசர்!

இந்நிலையில் ஹொம்பாலே பிலிம்ஸ் கன்னடத்திலிருந்து அடுத்த தமிழ் சினிமா உலகில் கால் எடுத்து வைக்க முயன்று வருகிறது. கேஜிஎஃப் வெற்றியை தொடர்ந்து தமிழில் ஒரு படத்தை தயாரிக்க ஹொம்பாலே பிலிம்ஸ் திட்டமிட்டுள்ளது.

Hombale Films
Hombale Films

இதற்காக பல்வேறு தமிழ் இயக்குனர்கள் குறித்தும் பேசி வந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது தமிழ் பெண் திரைப்பட இயக்குனர் சுதா கொங்கராவின் படத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

தமிழில் சூர்யா நடித்து பெரும் வரவேற்பை பெற்ற சூரரை போற்று படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா. சூர்யாவின் அந்த நெடுமாறன் ராஜாங்கம் கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று போன்ற ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர், கேஜிஎஃப்பை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்துள்ளதால் பிரம்மாண்டமான திரைப்படம் குறித்த அப்டேட்டை எதிர்பார்க்கலாம் என காத்திருக்கின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

Bigg Boss Update

To Top