News
இடியின் கடவுள் திரும்ப வந்துட்டார்… ஆனா வேற மாறி..? – Thor love and Thunder டீசர்!
மார்வெல் சூப்பர் ஹீரோக்களில் முக்கியமானவரான தோரின் புதிய படத்திற்கான புது டீசர் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் சூப்பர்ஹீரோக்கள் படமாக வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை குவித்துள்ளது மார்வெல். மார்வெல் ஸ்டுடியோஸின் முக்கியமான மும்மூர்த்தி சூப்பர் ஹீரோக்களில் ஒருவர் தோர். இந்த தோர் கதாப்பாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தோர் கதாப்பாத்திரத்தின் நான்காவது படமான தோர் லவ் அண்ட் தண்டர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதுவரை அதிகபட்சம் மார்வெலில் ஒரு சூப்பர் ஹீரோவுக்கு மூன்று படங்கள் வரை மட்டுமே வெளியாகி வந்தது. முதன்முறையாக நான்காவது படம் வெளியாகும் சூப்பர்ஹீரோ தோர் என்பது குறிப்பிடத்தக்கது.

தானோஸ் உடனான யுத்தத்திற்கு பிறகு கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி குழுவுடன் பயணத்தை தொடங்கிய தோர் இனி அடுத்து செய்ய போகும் சாகசங்கள்தான் கதை. இதில் லேடி தோராக நடாலி போர்ட்மேன் நடித்துள்ளார். இவர் முந்தைய பாகங்களில் தோரின் காதலி. ஆனால் இந்த டீசரில் தோரை போலவே உடை அணிந்து கையில் சுத்தியலோடு அவர் தோன்றும் காட்சி ரசிகர்களை வாய்பிளக்க செய்துள்ளது. இந்த படம் ஜூலை மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
