மனைவி விஷயத்தில் எனக்கு உதவினவர் ரஜினிகாந்த்!.. மனம் திறந்த லிவிங்ஸ்டன் !
டார்லிங் டார்லிங் டார்லிங் படம் மூலம் அறிமுகமாகி வில்லனாகவும் ஹீரோவாகவும் குணசித்ர கதாபாத்திரங்களிலும், காமெடியனாகவும் என எல்லாமாகவும் நடித்து அசத்தியவர் நடிகர் லிவிங்ஸ்டன். ஆனால், சமீப காலமாக பட வாய்ப்புகளே கிடைக்காமல், ஏகப்பட்ட கடனில் தத்தளித்துக் கொண்டிருந்த அவருக்கு ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
முன்பே ரஜினிகாந்த் உடன் வீரா,சுந்தர புருஷன் போன்ற படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளார் லிவிங்ஸ்டன்.ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்த லிவிங்ஸ்டன் கார்கி உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நிலையில், மீண்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தில் ரஜினிகாந்தின் நண்பராகவே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
லால் சலாம் படத்தின் சூட்டிங் சமயத்தில் தான் லிவிங்ஸ்டன் மனைவி ஜெஸ்ஸிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மனைவியை மருத்துவமனையில் சேர்த்து இருந்த செய்தி உதவி இயக்குநர்கள் மூலமாக எப்படியோ ரஜினி சார் காதுகளுக்கு சென்று விட உடனே இவரை அழைத்து, என்ன ஆச்சு எதுவும் சொல்ல மாட்டியா, உன்னை நான் ஒரு பிரதரா தானே பார்க்கிறேன். எவ்ளோ செலவாகும் எனக் கேட்டுள்ளார்.
ஆனால், அவரிடம் பணம் வாங்க ரொம்ப தயங்கிய என்னிடம் அப்படியெல்லாம் யோசிக்காத என கூறி பணம் கொடுத்து உதவினார். ஒட்டுமொத்தமாக என் மனைவியின் மருத்துவ செலவுக்கு தேவையான 15 லட்சம் ரூபாய் அப்படியே எடுத்துக் கொடுத்து, மேலும், தேவைப்பட்டால் தயங்காமல் கேளு என்றார்.
நான் ஏற்கனவே கடனில் இருக்கும் விஷயம் அவருக்கு தெரியும், சூப்பர் ஸ்டார் மட்டும் பணம் கொடுத்து உதவவில்லை என்றால் என் மனைவியை என்னால் காப்பாற்றியிருக்க முடியாது என லிவிங்ஸ்டன் உருக்கமாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், தனக்கு மட்டுமில்லை தன்னை போல பல கலைஞர்களுக்கு உரிய நேரத்தில் எதையும் பார்க்காமல் உதவி செய்யக் கூடிய தங்கமான மனசு கொண்டவர் ரஜினி சார் என லிவிங்ஸ்டன் பேசியது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.