News
நல்ல கதையை கோட்டை விட்ட அண்ணன் தம்பிகள் – சூர்யா, கார்த்திக்கு கிடைக்காமல் போன ஹிட் படம் என்ன தெரியுமா?
நடிகர் சூர்யாவும், கார்த்தியும் தமிழ்துறையில் தொடர்ந்து திரைப்படம் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருடனும் இணைந்து பணியாற்றிய இயக்குனர் என்றால் அது வெங்கட்பிரபு.

முதன் முதலாக மாநாடு கதையை வெங்கட்பிரபு எழுதியபோது அதை சூர்யாவிடம்தான் எடுத்து சென்றாராம். சூர்யாவிடம் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.
உடனே சூர்யா அரசியல் ரீதியான விஷயங்கள் படத்தில் இருப்பதால் அது திரைத்துறையில் பிரச்சனையை ஏற்படுத்தலாம் என எண்ணி மாநாடு கதையை மறுத்துவிட்டார்.
அதற்கு பதிலாக வெங்கட் பிரபு இயக்கிய மாஸ் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் மாஸ் திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை தரவில்லை.
அதற்கு பிறகு அதே கதை கொண்டு சென்று அவர் சூர்யாவின் தம்பி கார்த்தியிடம் கேட்டார். கார்த்தியும் இந்த கதைக்கு மறுப்பு தெரிவித்து அதற்கு பதிலாக வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரியாணி படத்தில் நடித்தார். அதுவும் பெரிதாக வெற்றி படமாக அமையவில்லை.

அதற்கு பிறகு இந்த கதையை ஒப்புக்கொண்ட சிம்புவுக்கு மாநாடு ஒரு ப்ளாக்பஸ்டர் படமாக அமைந்தது.
எனவே அண்ணன் தம்பி இருவருமே ஒரு நல்ல கதையை விட்டுவிட்டனர் என சினி வட்டாரத்தில் பேச்சு உள்ளது.
