Tag Archives: ஜப்பான்

ஏமாற்றத்தை கொடுத்ததா ஜப்பான்!.. ஜப்பான் முழு விமர்சனம்!..

சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதைகளங்களை தேர்ந்தெடுத்து திரைப்படமாக்குபவர் இயக்குனர் ராஜ் முருகன். இவர் இயக்கிய குக்கூ, ஜோக்கர், மெஹந்தி சர்க்கஸ் போன்ற திரைப்படங்கள் யாவும் சமூக கருத்துக்களை பேசும் வகையில் இருந்தது.

இந்த நிலையில் அவர் இயக்கி தற்சமயம் வெளியாகியிருக்கும் திரைப்படம் ஜப்பான். ஆனால் ஜப்பான் திரைப்படத்தை பொறுத்தவரை இந்த படத்தை முழுவதுமாக ஒரு கமர்ஷியல் திரைப்படமாக எடுத்துள்ளார் ராஜ் முருகன்.

வழக்கமான கமர்ஷியல் திரைப்படம் போலவே ஜப்பான் படம் உள்ளது.

படக்கதை:

படக்கதைப்படி கார்த்தி ஒரு பிரபலமான திருடன் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த நிலையில் ராயல் கோல்டு என்னும் தங்க கடையில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் காணாமல் போகின்றன. அந்த நகைகளை ஜப்பான் எனும் கார்த்திதான் திருடி இருப்பார் என போலீஸ் அவரை தேடுகிறது.

பாதி கதையில் போலீஸ் பிடியில் சிக்கிய ஜப்பான், நான் அவற்றை கொள்ளையடிக்கவில்லை. ஆனால் அந்த கொள்ளையடித்தது யார் என்று தெரியும் என்றும் கூறுகிறார் ஜப்பான்.

இந்த நிலையில் எப்படி அந்த தங்கத்தை கண்டறிகிறார்கள் என்பதே கதை.

விமர்சனம்:

படத்தில் கார்த்தி முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும் கூட இந்த கதையில் பிள்ளை படிப்புக்காக தங்கம் சேர்க்கும் ஒரு குடும்பம் உள்ளது. அவர்களே முக்கிய பாத்திரமாக பார்க்கப்படுகின்றனர். குறைவாக வந்தாலும் வழக்கமாக ராஜ் முருகன் படத்தில் வரும் கதாபாத்திரமாக அவர்கள் தெரிகின்றனர்.

படத்தின் ஓட்டத்தில் எந்த ஒரு சுறு சுறுப்பையும் பார்க்க முடியவில்லை. கதை மிகவும் மெதுவாக செல்கிறது. படத்தில் விஜய் மில்டன், சுனில் போன்ற கதாபாத்திரங்களுக்கு ஓரளவு முக்கிய கதாபாத்திரம் இருந்தாலும் சும்மா வைக்க வேண்டும் என கதாநாயகியின் கதாபாத்திரத்தை வைத்திருக்கின்றனர்.

பாதி படத்திற்கு பிறகு படத்தில் எதற்கு கதாநாயகி இருக்கிறார் என்றே புரியாத நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் ராஜ்முருகன் தன்னுடைய வழக்கமான ஸ்டைலிலேயே படம் எடுக்கலாம். கமர்சியல் படம் எடுக்கிறேன் என்று சுமாரான படத்தை கொடுத்திருக்க வேண்டாம் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

சென்னையில் எடுக்கப்பட்ட ஜப்பான் படம்!.. இயக்குனரே தமிழ் ஆளுதான்!.. இது என்னடா கூத்தா இருக்கு!.

ஜப்பானுக்கும் தமிழ் சினிமாவிற்கும் இடையே எப்போதுமே ஒரு நெருங்கிய தொடர்புண்டு. தமிழ் சினிமாவில் உள்ள பல படங்கள் ஜப்பானில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. முக்கியமாக நடிகர் ரஜினிகாந்துக்கு அதிகமான ரசிகர்களை ஜப்பான் கொண்டுள்ளது.

இந்த நிலையில் பல தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து ஜப்பானில் வெளியிடப்பட்டிருக்கின்றன ஆனால் ஜப்பான் படம் ஒன்றை தமிழ்நாட்டில் எடுத்த சம்பவமும் நடந்திருக்கின்றது தமிழில் தென்னவன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் நந்தகுமார்.

அவர் ஜப்பானில் ஒரு விழாவிற்கு சென்றிருந்த பொழுது ஒரு பட வாய்ப்பு கிடைத்தது. அதாவது தமிழ்நாட்டில் ஒரு ஜாப்பனீஸ் படத்தை எடுத்தால் எப்படி இருக்கும் என்று அவர்கள் கருதினார்கள் எனவே இது குறித்து நந்தகுமார் இடம் கேட்ட பொழுது அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

கதைப்படி ஒரு திருட்டு கும்பல் ஜப்பானில் உள்ள விலை உயர்ந்த பொருள் ஒன்றை தூக்கிக்கொண்டு சென்னைக்கு வந்து. இந்த நிலையில் அவர்களிடம் இருந்து அந்த பொருளை வாங்குவதற்காக நான்கு நிஞ்சாக்கள் அடங்கிய ஜப்பான் வீரர்கள் குழு இந்தியாவிற்கு வருகிறது அதை வைத்து கதை நடப்பதாக எடுக்கப்பட்ட அந்த பாடத்தின் பெயர் டான்சிங் வித் நிஞ்சா என்பதாகும்.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சென்னையில் எடுக்கப்பட்டு ஜப்பானில் வெளியான ஒரு திரைப்படம் ஆகும். இவ்வளவு காலமாக தமிழ் சினிமா மீது இருந்த பெரும் ஆவலின் காரணமாக ஜப்பான் மக்கள் இப்படியான ஒரு திரைப்படத்தை எடுத்து இருக்கின்றனர். இந்த திரைப்படம் ஜப்பானில் நல்ல வரவேற்பையும் பெற்று இருக்கின்றது. முதன் முதலாக ஜப்பானில் படம் இயக்கிய முதல் தமிழ் இயக்குனர் என்ற பெருமையை இதன் மூலமாக நந்தக்குமார் பெற்றார்.