தமிழில் இயக்குனர் பி.வாசு, சுந்தர்.சி போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் நந்தகுமார். அதன் பிறகு அவரே தனியாக சில திரைப்படங்களையும் எடுத்தார். முதன் முதலாக அவர் எடுக்க நினைத்த திரைப்படம் ரமணா.
ரமணா திரைப்படத்தின் கதையை எழுதிவிட்டு அவர் அதை படமாக்க நினைத்த பொழுது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அதற்குள் அதே கதையை ஏ.ஆர். முருகதாஸ் திரைப்படமாக்கிவிட்டார். பிறகு இந்த விஷயத்தை கூறி விஜயகாந்தின் வருத்தப்பட்டு இருக்கிறார்.
இயக்குனர் நந்தகுமார் பிறகு இதனை அடுத்து விஜயகாந்த் அடுத்தவருக்கு வாய்ப்பு கொடுக்க அதை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் தென்னவன். இது இல்லாமல் ஜப்பான் மொழியிலும் ஒரு திரைப்படத்தை இவர் இயக்கியிருக்கிறார்.
இவர் வளர்ந்து வந்த காலகட்டங்களில், ஆரம்பக்கட்டத்தில் ரஜினியுடன் அவருக்கு பழக்கம் இருந்தது. அதன் பிறகு வெகுநாட்கள் ரஜினியை அவர் பார்க்கவில்லை பிறகு ரஜினி மன்னன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது நந்தகுமார் ரஜினியை மீண்டும் சந்தித்தார் அப்பொழுது ரஜினி பெரிய நட்சத்திரமாக வளர்ந்திருந்தார்.
இருந்தாலும் நந்தகுமாரை பார்த்த உடனே ரஜினி எழுந்து நின்று அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு அவர் அமர்ந்த பிறகுதான் ரஜினி அமர்ந்தாராம். இப்போதைய நிலைமை என்ன என்று விசாரிக்கும் பொழுது பி வாசுவிடம் உதவி இயக்குனராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நந்தகுமார் அதற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி இன்னும் வளர்ந்து வருவீர்கள் கவலைப்படாதீர்கள் என்று கூறியிருக்கிறார் இந்த விஷயத்தை நந்தகுமார் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
ஜப்பானுக்கும் தமிழ் சினிமாவிற்கும் இடையே எப்போதுமே ஒரு நெருங்கிய தொடர்புண்டு. தமிழ் சினிமாவில் உள்ள பல படங்கள் ஜப்பானில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. முக்கியமாக நடிகர் ரஜினிகாந்துக்கு அதிகமான ரசிகர்களை ஜப்பான் கொண்டுள்ளது.
இந்த நிலையில் பல தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து ஜப்பானில் வெளியிடப்பட்டிருக்கின்றன ஆனால் ஜப்பான் படம் ஒன்றை தமிழ்நாட்டில் எடுத்த சம்பவமும் நடந்திருக்கின்றது தமிழில் தென்னவன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் நந்தகுமார்.
அவர் ஜப்பானில் ஒரு விழாவிற்கு சென்றிருந்த பொழுது ஒரு பட வாய்ப்பு கிடைத்தது. அதாவது தமிழ்நாட்டில் ஒரு ஜாப்பனீஸ் படத்தை எடுத்தால் எப்படி இருக்கும் என்று அவர்கள் கருதினார்கள் எனவே இது குறித்து நந்தகுமார் இடம் கேட்ட பொழுது அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
கதைப்படி ஒரு திருட்டு கும்பல் ஜப்பானில் உள்ள விலை உயர்ந்த பொருள் ஒன்றை தூக்கிக்கொண்டு சென்னைக்கு வந்து. இந்த நிலையில் அவர்களிடம் இருந்து அந்த பொருளை வாங்குவதற்காக நான்கு நிஞ்சாக்கள் அடங்கிய ஜப்பான் வீரர்கள் குழு இந்தியாவிற்கு வருகிறது அதை வைத்து கதை நடப்பதாக எடுக்கப்பட்ட அந்த பாடத்தின் பெயர் டான்சிங் வித் நிஞ்சா என்பதாகும்.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சென்னையில் எடுக்கப்பட்டு ஜப்பானில் வெளியான ஒரு திரைப்படம் ஆகும். இவ்வளவு காலமாக தமிழ் சினிமா மீது இருந்த பெரும் ஆவலின் காரணமாக ஜப்பான் மக்கள் இப்படியான ஒரு திரைப்படத்தை எடுத்து இருக்கின்றனர். இந்த திரைப்படம் ஜப்பானில் நல்ல வரவேற்பையும் பெற்று இருக்கின்றது. முதன் முதலாக ஜப்பானில் படம் இயக்கிய முதல் தமிழ் இயக்குனர் என்ற பெருமையை இதன் மூலமாக நந்தக்குமார் பெற்றார்.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips