Tag Archives: 23 ஆம் புலிகேசி

பிரபுதேவாவின் வாய்ப்பை பறித்த வடிவேலு… இல்லன்னா அந்த படத்தில் அவர்தான் ஹீரோ!..

Prabhu deva: தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் பிரபுதேவா. ஒரு சாதரண டான்ஸ் ஆடுபவராகத்தான் இவர் தமிழ் சினிமாவிற்கு வந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவரது திறமையை கண்ட தமிழ் சினிமா இவரை டான்ஸ் மாஸ்டராக்கியது.

மிக இளம் வயதிலேயே சினிமாவில் டான்ஸ் மாஸ்டரானவர் நடிகர் பிரபுதேவா. அதன் பிறகு சில படங்களில் பாடல்களில் இவரே வந்து ஆடிக்கொண்டிருப்பார். ஆனால் ஹீரோவாக நடிக்கும் ஆசை இவருக்கு வெகு நாட்களாக இருந்ததால் கதாநாயகனாக நடிக்க துவங்கினார் அதற்கும் கூட மக்கள் மத்தியில்  அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியது.

இந்த நிலையில் கமர்ஷியல் ஹீரோவாக வலம் வந்தவர் தற்சமயம் காமெடி கதாநாயகனாக நடிக்க துவங்கினார். அப்படியாக பிரபுதேவாவிற்கு வந்த ஒரு வாய்ப்பை வடிவேலு தட்டி பறித்த சம்பவமும் நடந்துள்ளது. ஆமாம் வடிவேலு நடிப்பில் வெளியாகி பெரும் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் 23 ஆம் புலிகேசி.

prabhu-deva

இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பானது முதலில் நடிகர் பிரபுதேவாவிற்குதான் வந்துள்ளது. நடிகர் பிரபுதேவா அல்லது நடிகர் ஜெய்ராமை வைத்து அந்த படத்தை எடுக்கதான் முடிவெடுத்திருந்தார் இயக்குனர் சிம்புதேவன்.

ஆனால் அந்த திரைப்படத்தின் கதையை கேள்விப்பட்ட வடிவேலு கண்டிப்பாக அந்த படத்தில் நடிக்க வேண்டும் என பேசி சிம்புதேவனை சமாதானம் செய்திருக்கிறார். வடிவேலுவை வைத்து இயக்க மனமில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார் சிம்புதேவன்.

இப்படியாக உருவான அந்த 23 ஆம் புலிகேசி திரைப்படம் பிறகு பெறும் ஹிட் கொடுத்தது.

வடிவேலு கடைசி வரை ஒத்துக்கல!.. ஆனா அந்த காமெடிதான் செம ஹிட்.. 23 ஆம் புலிகேசியில் நடந்த பிரச்சனை…

தமிழில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் நடிகர் வடிவேலு. வடிவேலுவின் காமெடிக்கு எல்லா காலங்களிலுமே வரவேற்பு இருந்து வந்தது. அதனாலயே மார்க்கெட் குறையாத ஒரு நடிகராக வடிவேலு இருந்து வந்தார்.

ஒரு காமெடி நடிகர் என்பதை தாண்டி ஒவ்வொரு படத்திலும் அவருக்கு கொடுக்கப்படும் வித்தியாசமான கதாபாத்திரங்களை மிகவும் சிறப்பாக செய்யக்கூடியவர் வடிவேலு. அது தான் வடிவேலு இவ்வளவு காலம் சினிமாவில் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

ஒரு காலத்திற்குப் பிறகு வடிவேலு தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அப்படி கதாநாயகனாக நடித்த வடிவேலுவிற்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது 23ஆம் புலிகேசி. சிம்புதேவன் இயக்கிய இந்த திரைப்படம் வடிவேலுவின் கதாநாயகன் வாழ்க்கைக்கு ஒரு ஆரம்பமாக அமைந்தது.

இந்த படத்தில் பல விஷயங்கள் வடிவேலு சேர்த்தவை என்று கூறப்படுகிறது இருந்தாலும் இதில் ஒரு காட்சியில் வி.எஸ் ராகவன் நீங்கள் இருவரும் ஒன்று சேருவீர்கள் என்று எனக்கு முன்பே தெரியும் என்று கூறுவார். அதற்கு எப்படி என கேட்கும் பொழுது இரட்டை குழந்தைகள் பிறந்து விட்டால் திரைக்கதையில் வேற என்னதான் செய்ய முடியும் என்று கூறுவார்.

இந்த வசனத்தை சிம்பு தேவன் வைக்கலாம் என்று கூறிய பொழுது அதற்கு வடிவேலு ஒப்புக்கொள்ளவில்லை. இது நல்லாவே இல்லை நம்மளே தமிழ் சினிமாவை கேலி செய்வது போல இருக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால் வி.எஸ் ராகவனுக்கும் அதில் உதவி இயக்குனராக பணிபுரிந்த பாண்டிராஜனுக்கும் அந்த வசனம் மிகவும் பிடித்து விட்டது.

எனவே வி.எஸ் ராகவன் இந்த காட்சியை எடுத்து வைத்துக் கொள்வோம் வேண்டாம் என்றால் அதை நீக்கி கொள்ளலாம் என்று கூறியுள்ளார். சரி என்று வடிவேலும் ஒப்புக்கொண்டுள்ளார் ஆனால் அந்த காட்சிக்கு தான் திரையரங்கில் அதிக வரவேற்பு கிடைத்தது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் பாண்டிராஜ்.

அந்த வயசிலையும் ஒரே டேக்கில் பெரிய டயலாக்கை பேசுனாங்க!.. இயக்குனரை வியக்க வைத்த ஆச்சி மனோரமா..

தமிழில் உள்ள பழம்பெரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மனோரமா. சிவாஜி எம்.ஜி.ஆர் காலகட்டத்தில் சினிமாவில் நடிகையாக அறிமுகமான மனோரமா பிறகு பல வருடங்கள் சினிமாவில் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

1000க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்த மனோரமாவிற்கு நடிப்பு அத்துபடி என்றே கூற வேண்டும். எந்த ஒரு கதாபாத்திரத்தை எடுத்தாலும் அதை மிக சிறப்பாக நடிக்க கூடியவர் மனோரமா. முக்கியமாக அம்மா கதாபாத்திரம் அவருக்கு மிகவும் தொடர்புடைய கதாபாத்திரமாகும்.

அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்திருக்கும் பொழுது தனது வீடு இடிந்த செய்தி அறிந்து மனோரமா அழும் காட்சி ஒன்று வரும். அந்த காட்சியை அவரை தவிர வேறு யாரும் அவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது.

இந்த நிலையில் இயக்குனர் சிம்பு தேவன் அவரை குறித்த சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை கூறியிருந்தார். 23ஆம் புலிகேசி திரைப்படத்தில் மனோரமாவிற்கு முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டிருந்தது. அந்த படத்தில் நடிக்கும் பொழுது மிகவும் முதியவராக இருந்தார் மனோரமா.

அப்பொழுது அவருக்கு ஒன்றரை பக்க வசனம் ஒன்று இருந்தது அதை மனப்பாடம் செய்ய சொல்லலாம் என்று அந்த பேப்பரை மனோரமாவிடம் கொடுக்கச் சென்றார் சிம்புதேவன். ஆனால் அதை வாங்க மறுத்த மனோரமா அதை ஒரு முறை படித்து காட்டுங்கள் என்று கூறியுள்ளார். சரி என்று சிம்பு தேவன் ஒருமுறை படித்து காட்டியுள்ளார்.

மீண்டும் ஒருமுறை படித்துக் காட்ட சொல்லியுள்ளார் மனோரமா மீண்டும் ஒருமுறை படித்துக் காட்டிய பிறகு வேறு எதுவுமே பேசவில்லை மனோரமா. படத்தின் காட்சியில் சிங்கிள் டேக்கில் அந்த வசனங்களை சரியாக பேசி முடித்தார். இந்த வயதிலும் இப்படி ஒரு ஞாபக சக்தியா என அசந்து போய் உள்ளார் சிம்புதேவன் இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

காது கேட்காமலே நடிச்சவரு வி.எஸ் ராகவன்!.. படக்குழுவையே திரும்பி பார்க்க வைத்தவர்!..

தமிழ் சினிமாவில் பழைய நடிகர்களுக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வமும் மரியாதையும் இப்போது உள்ள நடிகர்களை விட அதிகமாகவே இருக்கும். படப்பிடிப்பு துவங்குகிறது என்றால் அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்கள் நடிகர்கள்.

சிவாஜி கணேசனை எடுத்துக் கொண்டால் அவரும் கூட எல்லா படங்களிலுமே படப்பிடிப்பிற்கு ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் கூட முன்னால் வந்து விடுவாராம். ஆனால் இப்போது உள்ள நடிகர்கள் அப்படி கிடையாது.

23ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு நடந்த பொழுது இயக்குனர் பாண்டி ராஜ் அதில் பணிபுரிந்திருந்தார். அந்த அனுபவம் குறித்து அவர் கூறும் பொழுது நாகேஷ், மனோரமா, வி.எஸ் ராகவன் போன்ற நடிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு மிக சீக்கிரமாகவே வந்து படப்பிடிப்பு நேரத்திற்கு முன்பே மேக்கப்பும் போட்டு தயாராகி விடுவார்கள் என்று கூறினார்.

இத்தனைக்கும் நடிகர் நாகேஷ் அப்பொழுது நடக்கக்கூட முடியாத நிலையில் இருந்தார். இருந்தாலும் ஒரு மணி நேரம் முன்னதாகவே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவார். அதேபோல வி.எஸ் ராகவனுக்கு அப்பொழுது உடல் ரீதியான பிரச்சினைகள் இருந்தன.

காது அவருக்கு ஒழுங்காக கேட்காமல் இருந்தது. இதனால் அவரை தொட்டால்தான் அவர் அடுத்த டயலாக்கை பேசுவார் மற்றவர் என்ன டயலாக் பேசுகிறார்கள் என்பது அவருக்கு தெரியாது. பக்கத்தில் நிற்கும் ஒரு ஆள் அவரது கையை தொட வேண்டும் இப்படி எல்லாம் இருந்தும் சிறப்பாக நடித்து கொடுத்தார்கள் அந்த நடிகர்கள்.

எனவே அந்த காலத்து நடிகர்களுக்கு இருக்கும் தொழில் ரீதியான மரியாதை என்பது இப்போது தமிழ் சினிமாவில் கிடையாது என்று பாண்டிராஜ் தனது பேட்டியில் கூறியுள்ளார்.