பிரபுதேவா பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் முக்கியமாக நடன கலைஞராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் நடன கலைஞராக தனது வாழ்க்கையை துவங்கிய பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
நடிகராக இவருக்கு வரவேற்பும் அதிகமாக கிடைத்தது. காதலன் போன்ற திரைப்படங்களில் நடித்த பிறகு பிரபு தேவாவிற்கும் தமிழ் சினிமாவில் ஒரு மார்க்கெட் இருந்தது.
அதனை தொடர்ந்து இப்போது வரை சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் ஒரு நடிகராக இவர் இருக்கிறார் அதே சமயம் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் டான்ஸ் மாஸ்டர் ஆகவும் வேலை பார்த்து வருகிறார்.
மதன் கௌரி அணுகுமுறை:
விஜய் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பிரபுதேவா இருந்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பிரபுதேவா பிரபல யூட்யூபரான மதன் கௌரிக்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.
அந்த பேட்டியில் பிரபு தேவாவிடம் மதன் கௌரி கேள்வி கேட்கும் விதம் மிகவும் மோசமானதாக இருந்தது. அவ்வளவு திறமை வாய்ந்த ஒரு பிரபலத்தை மதன் கௌரிக்கு கையாள தெரியவில்லை என்ற இது குறித்து ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
முதலில் மதன் கௌரி பேச கற்றுக் கொள்ள வேண்டும் நடிகர்களிடம் ஒரு தொகுப்பாளராக எப்படி பேச வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் மதன் கௌரி குறித்து பேசி வருகின்றனர்.