Tag Archives: lyca production

நீங்கதான் காப்பாத்தணும்..கமல் படத்தால் வந்த பிரச்சனை.. ஆக்‌ஷன் எடுத்த ரஜினி..!

தமிழ்நாட்டில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரிக்கும் ஒரு சில முக்கிய நிறுவனங்களில் லைக்கா நிறுவனமும் ஒன்றாகும். நடிகர் ரஜினி விஜய் மாதிரியான பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரிப்பதற்கு குறைந்த அளவிலான தயாரிப்பு நிறுவனங்கள் தான் தமிழ் சினிமாவில் இருக்கின்றன.

அப்படியான நிறுவனங்களில் லைக்காவும் ஒன்று. வெளிநாடுகளில் மொபைல் சிம் விற்று வரும் ஒரு நிறுவனமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறது.

சமீபத்தில் லைக்காவிற்கு நிறைய திரைப்படங்கள் தோல்வி படமாக அமைந்தது வரிசையாக லால் சலாம் விடாமுயற்சி இந்தியன் 2 மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே இவர்களுக்கு மிகுந்த தோல்வியை ஏற்படுத்தின. இந்த நிலையில் இந்தியன் 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்று கொண்டு இருக்கிறது.

இதற்கு காரணம் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு நிறைய செலவு செய்து அந்த படம் ஓடவில்லை என்பதால் மூன்றாம் பாகத்திற்கான தயாரிப்பு செலவு குறைத்துள்ளது லைக்கா. இதனால் இயக்குனர் ஷங்கருக்கும் லைக்காவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே இந்த பாடப்பிடிப்பு நின்று விட்டது.

இந்த நிலையில் இது குறித்து ரஜினிகாந்திடம் உதவி கேட்டிருக்கிறது லைக்கா நிறுவனம். ஷங்கரிடம் பேசி மீதி படப்பிடிப்பையும் நடத்துமாறு ரஜினிகாந்திடம் கேட்டுள்ளது லைக்கா நிறுவனம். இதனை அடுத்து ரஜினிகாந்த் இயக்குனர் ஷங்கரை நேரில் சந்தித்து இருக்கிறார்.

இருந்தாலும் கூட பட்ஜெட் விஷயங்களில் இன்னமுமே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது.

அஜித்துக்கு இப்ப கமல், ரஜினி உதவி தேவை!.. விடாமுயற்சிக்காக களம் இறங்கிய நடிகர்கள்!.

தமிழில் பெரும் பட்ஜெட்டில் திரைப்படம் தயாரிக்கும் நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக லைக்கா நிறுவனம் இருந்து வருகிறது. லைக்கா நிறுவனம் லண்டனில் பெரும் தொழிலதிபராக உள்ள சுபாஸ்கரன் என்பவரால் நடத்தப்படும் நிறுவனமாகும்.

இதனால் மற்ற தயாரிப்பு நிறுவனங்களை காட்டிலும் கொஞ்சம் காசு அதிகமாக உள்ள நிறுவனமாக லைக்கா நிறுவனம் இருந்து வருகிறது. ஆனால் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் பெரிய ஹீரோக்கள் படங்களை கையில் எடுத்தால் சிக்கல்தான் ஆகும் என்பதை தாமதமாகதான் லைக்கா நிறுவனம் புரிந்துக்கொண்டுள்ளது.

வரிசையாக கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3, ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன், அஜித் நடிப்பில் விடாமுயற்சி ஆகிய நான்கு படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வந்தது லைக்கா நிறுவனம். பொதுவாகவே இயக்குனர் ஷங்கர் எவ்வளவு செலவு செய்யக்கூடியவர் என்பது பலரும் அறிந்த விஷயமே.

இந்த நிலையில் அதிக படங்களை கையில் எடுத்ததால் நிதி நெருக்கடியில் சிக்கியது லைக்கா நிறுவனம். எனவே விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை சிறிது நாட்கள் நிறுத்தி வைக்க முடிவு செய்தது லைக்கா நிறுவனம். ஆனால் வருகிற ஜூன் மாதம் முதல் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு நடிக்க செல்ல இருக்கிறேன்.

அதற்குள் என்னை வைத்து படப்பிடிப்பை முடிக்க முடித்து கொள்ளுங்கள் என கூறிவிட்டார் அஜித். இதனை தொடர்ந்து இந்தியன் 2 மற்றும் வேட்டையன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறது லைக்கா நிறுவனம்.

இதன் மூலம் படம் வெளியாவதற்கு முன்பே படத்திற்கான ஓ.டி.டி, சாட்டிலைட் போன்ற உரிமைகள் விற்பனையாகும். அதை வைத்து விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிடலாம் என திட்டமிட்டு இந்த இரண்டு ஹீரோக்கள் படத்தையும் களம் இறக்கியுள்ளது லைக்கா நிறுவனம்.

ஜூன் மாசம் வரைக்கும்தான் டைம்!.. ரஜினிக்கு உதவப்போய் அஜித்திடம் சிக்கிய தயாரிப்பு நிறுவனம்!.. அஜித் கொடுத்த கடைசி வார்னிங்!.

தமிழில் பெரும் படங்களை இயக்க கூடிய நிறுவனமாக லைக்கா நிறுவனம் உள்ளது. லைக்கா நிறுவனம் வெளிநாட்டில் சிம் கார்டு நிறுவனமாக செயல்ப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து பெரிய படங்களாக தயாரித்து வருவதால் தற்சமயம் சிக்கலில் சிக்கியிருக்கிறது லைக்கா நிறுவனம்.

பெரும்பாலும் பெரிய நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்குவது கொஞ்சம் கடினமான காரியமாகும். ஒரு நாளைக்கான படப்பிடிப்பு செலவுகளுக்கே பல லட்சங்கள் செல்வாகும். இந்த நிலையில் பல பெரிய படங்களை கமிட் செய்தது லைக்கா நிறுவனம்.

அப்படியாக லைக்கா நிறுவனம் இந்தியன் 2, இந்தியன் 3, வேட்டையன், விடாமுயற்சி என கமிட் ஆகி இருக்கும் அனைத்து படங்களும் பெரும் படங்களாக கமிட்டாகி இருக்கிறது. இதனால் சில காலங்களுக்கு விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளது லைக்கா நிறுவனம்.

ajith-1

ஏனெனில் பொருளாதார சிக்கல் காரணமாக அனைத்து படங்களையும் தயாரிப்பது லைக்கா நிறுவனத்திற்கு கடினமான காரியமாக உள்ளது. எனவே முதலில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு பிறகு விடாமுயற்சியை தொடரலாம் என முடிவு செய்தது லைக்கா நிறுவனம்.

ஆனால் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்குவதற்காக காத்துக்கொண்டுள்ளார். இந்த நிலையில் லைக்கா நிறுவனத்திடம் பேசிய அஜித் ஜூன் மாதம் அடுத்த படத்திற்கு நடிக்க போகிறேன். அது முடியும் வரை என்னால் கால் ஷூட் கொடுக்க முடியாது. அதற்கு முன்பே படப்பிடிப்பை முடித்துவிடுங்கள் என கூறிவிட்டாராம்.

இதனை தொடர்ந்து அடுத்த வாரம் முதல் மீண்டும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.

தீபாவளி வரைக்கும் அஜித் படத்தின் படப்பிடிப்பு கிடையாது!.. ரஜினியால் தடைப்பட்டு போன விடாமுயற்சி படப்பிடிப்பு!.

Vidamuyarchi : தமிழ்சினிமாவில் உள்ள பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனங்களாக சன் பிக்சர்ஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இருந்து வருகிறது. லைக்கா நிறுவனத்தின் நிறுவனரான சுபாஸ்கரன் வெளிநாட்டில் தொழில் செய்து வருகிறார். அதனால் பெரும் பட்ஜெட் திரைப்படங்களுக்கு அவரால் எளிமையாக தயாரிப்பு செலவுகளை செய்ய முடிகிறது.

சினிமாவில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் ஒரு பெரும் படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அது நல்ல வெற்றியை கொடுக்கவில்லை என்றால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல படத்திற்கான கால்ஷீட் தாண்டி அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்தினாலும் அது தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் இந்த இரண்டு பிரச்சனைகளையும் சந்தித்து வரும் நிறுவனமாக லைக்கா நிறுவனம் இருக்கிறது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த மாதம் வெளியான லால் சலாம் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அந்த படத்திற்கு தயாரிப்பு செலவு செய்த தொகையை கூட திரைப்படம் வசூல் செய்து தரவில்லை என கூறப்படுகிறது.

சிக்கலில் லைகா நிறுவனம்

இதிலேயே லைக்கா நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தை படமாக்குகிறேன் என்று வெகு நாட்களாக அந்த படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி படப்பிடிப்பை நடத்தி வருகிறார். ஆனால் இன்னமும் படப்பிடிப்பை முடித்த பாடில்லை.

Vettaiyan

அதே போல கிட்டத்தட்ட 8 மாதங்களாக வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தீபாவளிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெருந்த நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது லைகா நிறுவனம்.

இதனையடுத்து வேட்டையன் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுக்கும் என நம்பியுள்ளது லைகா. எனவே முதலில் தீபாவளிக்கு வேட்டையன் திரைப்படத்தை வெளியிடுவோம். பிறகு அந்த லாபத்தை வைத்து விடாமுயற்சி படப்பிடிப்பை நடத்தலாம் என முடிவெடுத்துள்ளனர்.