Tag Archives: radhika

தங்கச்சியை வச்சி படம் பண்ணும்போது மணிரத்னம் செஞ்ச வேலை… குடும்பமே ஆடிபோயிட்டோம்.. உண்மையை உடைத்த ராதிகா..!

தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை ராதிகா. நடிகை ராதிகா கருப்பு நிறத்தில் இருந்தார் என்றாலும் கூட தனிப்பட்ட நடிப்புத் திறனை கொண்டவராக இருந்தார்.

அதனால்தான் அவர் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடக்க கூடியவராக இருந்தார். இப்பொழுதும் சீரியல்களில் அவரால் நடிக்க முடிவதற்கு காரணம் அதுதான். இந்த நிலையில் ராதிகா சமீபத்தில் தன்னுடைய தங்கை நிரோஷா குறித்து பேட்டியில் பேசியிருந்தார்.

ராதிகாவின் தங்கைதான் நீரோஷா என்பது பலருமே அறியாத விஷயமாகும் நீரோஷா குறித்து ராதிகா பேட்டியில் கூறும் பொழுது நான் ஒரு நாள் குடும்ப புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த பொழுது மணிரத்தினம் சார் என்னுடன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

நீரோஷாவுக்கு வைத்த காட்சி:

nirosha

அப்பொழுதுதான் அவர் நீரோஷாவின் புகைப்படத்தை பார்த்தார். யார் இந்த பெண் என்று கேட்டார். நான் எனது தங்கை என்று கூறினேன் பிறகு எனது குடும்பத்திடம் பேசி அவரது திரைப்படத்தில் நீரோஷாவை நடிக்க வைத்தார்.

அப்பொழுது அந்த திரைப்படத்தில் நீச்சல் உடை அணிந்து வருவது போன்ற காட்சி ஒன்று இருந்தது. அதை பார்த்து எங்கள் குடும்பமே அதிர்ச்சி அடைந்து விட்டது. ஏனெனில் குடும்பத்தில் யாருக்கும் நீரோஷா நடிப்பதில் பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை.

அப்படி இருக்கும் பொழுது இப்படியான காட்சி வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் மணிரத்தினம் எங்களிடம் கூறும் பொழுது இந்த காட்சி நன்றாக வரும். இந்த பாடலை நான் முடித்த பிறகு உங்களுக்கு இந்த காட்சி பிடிக்கவில்லை என்றால் நான் அதை நீக்கிவிடுகிறேன் என்று கூறி காட்சிகளை எடுத்தார். ஆனால் அந்த பாடல் முடித்த பிறகு எனக்குமே அந்த காட்சி பிடித்திருந்தது என்று கூறியிருக்கிறார் நடிகை ராதிகா.

யாரும் உங்களை ஒண்ணும் பண்ண முடியாது.. ஆனா எப்ப இதை நிறுத்த போறீங்க.. ராதிகாவுக்கு பதில் கேள்வி வைத்த விசித்ரா..!

கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராதிகா. அதற்குப் பிறகு ராதிகா நிறைய பட வாய்ப்புகளை பெற்றார்.

கருப்பு நிறத்தில் இருப்பது எல்லாம் நடிப்பதற்கு ஒரு தடையில்லை என்று தமிழ் சினிமாவில் நிரூபித்த நடிகைகளில் நடிகை ராதிகாவும் ஒருவர். தமிழை தாண்டி மாற்று மொழி படங்களிலும் நிறைய நடித்திருக்கிறார் ராதிகா.

மேலும் அதற்குப் பிறகு அவர் சீரியலிலும் கவனம் செலுத்த தொடங்கினார். ஏனெனில் பொதுவாகவே சினிமாவில் ஒரு வயதுக்கு பிறகு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் என்பது குறைந்துவிடும் .

ராதிகாவுக்கு வரவேற்பு:

அந்த சமயத்தில் சீரியலை தேர்ந்தெடுத்து சின்னத்திரையிலும் அதிக வரவேற்பு பெற்றார் ராதிகா. இவர் நடித்த சித்தி மாதிரியான சீரியல்கள் அப்பொழுது எக்கச்சக்கமான வரவேற்பு பெற்றது. இதற்காகவே சீரியல் தயாரிப்பு நிறுவனத்தையும் உருவாக்கி அதன் மூலமும் நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.

இவர் ஒரு பேட்டியில் பேசும் பொழுது தொடர்ந்து என்னைப் பற்றி அவதூறாக நிறைய எழுதுகிறார்கள். பேசுகிறார்கள் எனக்கு அதைப் பற்றி எல்லாம் எந்த ஒரு கவலையும் கிடையாது. ஏனெனில் இதையெல்லாம் எனது குடும்பம் நம்ப போறது கிடையாது என்று ராதிகா கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை விசித்ரா சமீபத்தில் பேசும்பொழுது உங்களை யாரும் ஒன்னும் பண்ண முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் தொடர்ந்து சினிமா பிரபலங்களை அவதூராக பேசிக் கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் அதை கண்டு கொள்ளாமல் இப்படி இருந்து விட்டால் அவர்கள் அதை மறுபடி மறுபடி செய்து கொண்டிருப்பார்கள். அப்படி என்றால் இதை எப்படி நீங்கள் நிறுத்தப் போகிறீர்கள் ஒரு சீனியர் நடிகையாக இவர்களுக்கு இந்த பொறுப்பு இல்லையே என்று அதற்கு கருத்து தெரிவித்திருந்தார் விசித்ரா

விஜயகாந்த் திருமணத்தை ராவத்தர் நிறுத்த இதுதான் காரணம்.. ஒரு இஸ்லாமியரா இருந்துக்கிட்டு இதை பண்ணியிருக்க கூடாது?!.

தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து மக்கள் மத்தியில் மாறாத அன்பை பெற்றவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்தின் இளமை காலக்கட்டங்களில் பெரும்பாலும் அவரது திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்திருந்தன. விஜயகாந்த் தமிழ் சினிமாவிற்குள் வந்தப்போதே அவரது நண்பர் ராவத்தரையும் கூட்டிக்கொண்டுதான் வந்தார்.

இருவரும் ஒன்றாகவே சினிமாவில் உயரத்தை தொட்டனர். சொல்லப்போனால் ராவத்தர் விஜயகாந்தின் மிக நெருங்கிய நண்பராவார். எந்த அளவிற்கு நெருங்கிய நண்பர் என்றால் விஜயகாந்தின் சொந்த வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை கூட ராவத்தர்தான் எடுப்பார்.

Vijayakanth

இந்த நிலையில் விஜயகாந்தின் கல்யாண விஷயத்தில் இப்ராஹிம் ராவத்தரின் பங்கு முக்கியமானது ஆகும். எவ்வளவோ பெரிய பெரிய தொழிலதிபர்கள் அப்போது விஜயகாந்திற்கு தங்களது பெண்ணை திருமணம் செய்து வைக்க தயாராக இருந்தனர்.

ஆனால் அதற்கு ராவத்தர் ஒப்புக்கொள்ளவில்லை. அதே போல நடிகை ராதிகாவை விஜயகாந்த் திருமணம் செய்ய இருந்தப்போது ராவத்தர் அதை தடுத்துவிட்டதாக அப்போது ஒரு பேச்சு உண்டு. ராதிகா கதாநாயகி என்பதால்தான் ராவத்தர் அவரை விஜயகாந்த் திருமணம் செய்துக்கொள்ள ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

vijayakanth-2

ஆனால் உண்மையில் ராவத்தருக்கு அதிகமாக ஜாதகம் மீது நம்பிக்கை உள்ளதாம். விஜயகாந்திற்கு ஒரு ஜாதகம் பொருந்தவில்லை என்றால் அது உலக அழகியாகவே இருந்தாலும் ராவத்தர் ஒப்புக்கொள்ள மாட்டார். இந்த காரணத்தால்தான் ராதிகாவை விஜயகாந்த் திருமணம் செய்ய அவர் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

ஒரு இஸ்லாமியராக இருந்தும் ஜாதகம் ஜோசியம் மேல் எல்லாம் ராவத்தர் நம்பிக்கை வைத்திருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.

எங்கப்பா பல பெண்களை வச்சிருந்தப்பையும் கூட அதை சரியா செஞ்சுடுவார்!.. ஒப்பன் டாக் கொடுத்த ராதா ரவி!.

ரஜினி, கமல் மாதிரியான முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ராதாரவி. ஒரு காலத்தில் வில்லனாக நடித்த நடிகர்கள் பலரும் தற்சமயம் காமெடியாக நடித்து வருகின்றனர். ஆனால் வில்லனாக நடித்த சமயத்திலேயே படங்களில் காமெடி செய்து வரும் நபராக ராதா ரவி இருந்துள்ளார்.

எம்.ஆர் ராதாவின் மகன் என்பதால் எளிதாகவே இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ராதாரவி பேட்டிகளில் பேசும்போது பல விஷயங்களை மிகவும் வெளிப்படையாக பேசிவிடுவார். அப்படியாக தனது தந்தை குறித்தும் அவர் பேசியிருந்தார்.

mr-radha

அதில் அவர் பேசும்போது என் வீட்டை பொறுத்தவரை அதை மொத்தமாக கட்டி காத்தவர் என்னுடைய தாய்தான். என் தாய் இல்லையென்றால் எம்.ஆர் ராதாவிற்கு நல்ல பெயரே கிடையாது. எம்.ஆர் ராதா அப்போது நிறைய பெண்களுடன் தொடர்பில் இருந்தார்.

ஆனால் அவரை பொறுத்தவரை தொடர்பில் இருக்கும் யாரையும் கைவிட மாட்டார். அவர்களுக்கு வீடெல்லாம் வாங்கி கொடுத்து செட்டில் செய்து விடுவார். அவர்களது பிள்ளைகளும் எங்களோடுதான் வளர்ந்தனர். ராதிகா, நீரோசா எல்லாம் எங்கள் வீட்டில் சிறு வயதில் தங்கியிருந்தனர் என கூறுகிறார் ராதா ரவி.

பாரதிராஜா எவ்வளவு முயற்சி பண்ணியும் எடுக்க முடியாமல் போன காட்சி!.. நடிகை ஆடததால் வந்த பிரச்சனை!.

Director Bharathiraja:  கிராமத்து மனம் வீசும் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் எடுக்கும் முக்கியமான இயக்குனராக பாரதிராஜா இருந்து வருகிறார். முதல் படத்தை பொறுத்தவரை இயக்குனர்கள் பலரும் அதிகமாக வெற்றி பெறும் சண்டை படங்களையே எடுக்க நினைப்பார்கள்.

ஆனால் பாரதிராஜாவின் முதல் படமே 16 வயதினிலே திரைப்படமாகும். கமலுக்கு கோவணம் நடிக்க வைத்தார் பாரதிராஜா. அப்படியும் அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்தது. சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி கொண்டு அதன் படியே திரைப்படங்களை எடுத்து வந்தார்.

பாரதிராஜா தனது திரைப்படங்களில் சின்ன சின்ன காட்சிகளை கூட மிகவும் கஷ்டப்பட்டு எடுக்க கூடியவர். கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில்தான் அவர் நடிகை ராதிகாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்.

அந்த படத்தில் பூவரசம்பூ  பூத்தாச்சு என்கிற பாடல் ஒன்று வரும். அந்த பாடலை படமாக்கும்போது தூது போ ரயிலே ரயிலே என்கிற வரிகள் வரும் நேரத்தில் ரயிலுக்கு பக்கத்தில் கதாநாயகி ஆடுவது போல காட்சி வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அப்போதெல்லாம் ரயில்வேயில் அனுமதி வாங்குவது கடினம் என்பதால் ரயில் போகும் ஒரு பாதையில் கேமிராக்களை செட் செய்து அப்படியே ராதிகாவை ஆட வைத்து படமாக்க முடிவு செய்தனர். அதற்கான படப்பிடிப்பு வேலைகளும் தயாராகின.

ஆனால் படப்பிடிப்பு நடத்தும்போது ரயில் அதிக சத்தத்தோடு வந்ததால் அங்கு படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. முக்கியமாக ராதிகாவால் அந்த ரயில் சத்தத்தில் ஆட முடியவில்லை. அதற்கு பிறகுதான் ரயிலுக்கு இவ்வளவு அருகில் படப்பிடிப்பு நடத்த முடியாது என்பது பாரதிராஜாவிற்கு தெரிந்துள்ளது,

இதனையடுத்து தூரத்தில் ரயில் செல்வது போல அந்த காட்சியை இயக்கினார் பாரதிராஜா.

அந்த கருப்பன் கூட எல்லாம் நடிக்க மாட்டேன்!.. விஜயகாந்தை உதாசீனப்படுத்திய இரண்டு நடிகைகள்!..

Actor Vijayakanth: தமிழில் ஒரே வருடத்தில் அதிகமாக கதாநாயகனாக பல படங்களில் நடித்து பெரும் சாதனை படைத்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிக்கும் திரைப்படத்திற்கு பாமர மக்களின் மத்தியில் அப்போது பெரும் வரவேற்பு இருந்தது.

அதனால் தொடர்ந்து விஜயகாந்தின் திரைப்படங்களுக்கு நீ நான் என்று தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்தார்கள். மேலும் விஜயகாந்த் புதிய இயக்குனர்களை அதிகமாக வாழ வைத்துக் கொண்டிருந்தார்.

புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் நடிகர்களில் முதலிடத்தில் விஜயகாந்த்தான் இருந்தார் . முக்கியமாக விஜய்யின் தந்தையான எஸ்.ஏ சந்திரசேகரை சினிமாவில் வளர்த்து விட்டவர் விஜயகாந்த். தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தது மட்டுமில்லாமல் விஜய் சினிமாவில் பிரபலமாவதற்கு உதவும் வகையில் செந்தூரப்பாண்டி என்னும் திரைப்படத்தில் தனது தம்பியாக விஜய்யை நடிக்க வைத்தார் விஜயகாந்த்.

ஆனால் ஆரம்ப கட்டத்தில் விஜயகாந்த் சினிமாவிற்கு வந்த பொழுது அதிகமாக உருவ கேலிக்கு உள்ளானார். அவரின் கருப்பு தேகத்தை பலரும் கிண்டல் செய்து வந்தனர். அந்த நிலையில் ஒரு திரைப்படத்தில் விஜயகாந்திற்கு ஜோடியாக ராதிகாவை நடிக்க வைக்க முடிவு செய்தனர். ராதிகாவும் கருப்பு நிறத்தில்தான் இருப்பார் என்றாலும் கூட அவர் விஜயகாந்தை கேலி பேசினார்.

கருப்பாக இருக்கும் அந்த நபருடன் நான் நடிக்க முடியாது என்று தவிர்த்து விட்டார். அதன் பிறகு விஜயகாந்திற்க்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை லட்சுமியிடம் கேட்ட பொழுது அவரும் மறுத்துவிட்டார். இப்படி இந்த இரண்டு நடிகைகளும் உதாசீனப்படுத்தினாலும் கூட பிறகு விஜயகாந்த் பெரும் நடிகராக வளர்ந்த பிறகு அவருடன் சேர்ந்து நானே ராஜா நானே மந்திரி, நீதியின் மறுபக்கம், பூந்தோட்ட காவல்காரன் போன்ற பல படங்களில் ராதிகா கதாநாயகியாக நடித்தார்.

அதேபோல கண்ணுபட போகுதய்யா திரைப்படத்தில் விஜயகாந்திற்கு அம்மாவாக நடித்தார் லட்சுமி. காலம் எதை வேண்டுமானாலும் மாற்றி போடும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.

கல்யாணம் பண்ணுவேன்னு தெரியாம பெரிய வேலையா பார்த்துட்டேன்… ராதிகாவிடம் வசமாக சிக்கிய சரத்குமார்!..

ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பிறகு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று கதாநாயகனாக நடிக்க துவங்கியவர் நடிகர் சரத்குமார்.

அதன் பிறகு அவர் எக்கச்சக்கமான வெற்றியை திரைப்படங்களை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் ஜெமினி கணேசன் போலவே ஒரு காலகட்டத்தில் காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருந்தவர் சரத்குமார்.

நடிகை ராதிகாவைதான் இவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு முன்பு கிட்டத்தட்ட 7 வருடங்கள் இவர்கள் நண்பர்களாக இருந்தன.ர் நண்பர்களாக இருந்த காலத்தில் எப்போதுமே சரத்குமாருக்கு ராதிகா மீது எந்த ஒரு காதலும் வந்ததே கிடையாது.

இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது எனக்கே எதிர்காலத்தில் ராதிகாவை திருமணம் செய்து கொள்வோம் என்று தெரியாது. இதனால் நான் ஒவ்வொரு பெண்ணை காதலிக்கும் பொழுதும் அந்த காதல் கதைகளை எல்லாம் ராதிகாவிடம் பகிர்ந்து கொள்வேன்.

அந்த காதலில் வரும் பிரச்சனைகளையும் அவரிடம்தான் பகிர்ந்து கொள்வேன். ஆனால் எதிர்காலத்தில் அவர்தான் எனக்கு மனைவி ஆவார் என்று தெரிந்திருந்தால் நான் இந்த மாதிரியான விஷயங்களை செய்திருக்க மாட்டேன் இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு ராதிகா என்னை புரிந்து கொண்டார். எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு புரிதலை உருவாக்கியது அந்த ஏழு வருட நட்புதான் என்று தனது பேட்டியில் கூறியுள்ளார் சரத்குமார்.