Tag Archives: rajkiran

சினிமாவை வேடிக்கை பார்க்க வர்றவங்களுக்கும் அதை செய்யணும்!.. விஜயகாந்தை தாண்டி ராஜ்கிரண் செய்த சம்பவம்!.. என்ன மனுசன்யா!..

Rajkiran and Vijayakanth: 1990களில் தமிழ் சினிமாவில் பெரும் வளர்ச்சியை உருவாக்கியது கிராமபுரத்தில் இருந்து வந்த சாதாரண மனிதர்கள்தான். அந்த காலகட்டத்தில் சினிமாவின் மீது மோகம் கொண்டு எக்கச்சக்கமான இளைஞர்கள் வாய்ப்பை தேடி சென்னைக்கு வந்தனர்.

அப்படி வாய்ப்பு தேடி வந்து சினிமாவில் வாய்ப்புகளை பெற்றவர்கள்தான் பிறகு சினிமாவை கட்டமைத்தனர். என்று கூறலாம். பாரதிராஜா, பாக்யராஜ், வைரமுத்து, இளையராஜா இப்படியான இந்த வரிசையில் நடிகர் ராஜ்கிரணும் ஒருவர்.

இவர்கள் எல்லாம் சின்ன கிராமத்தில் வறுமையான குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்து பிறகு பெரும் உச்சத்தை தொட்டவர்கள். இவர்கள் எல்லோருடைய கதைகளும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ஒரே மாதிரிதான் இருக்கும்.

சாப்பாட்டிற்கே வழியில்லாமல் சினிமாவில் வாய்ப்பு தேடி இருப்பார்கள். அதனால்தான் நடிகர் விஜயகாந்த் கூட சினிமாவிற்கு வந்த பிறகு சாப்பாடு விஷயத்தில் முக்கியத்துவம் கொடுத்தார். அதேபோல ராஜ்கிரனும் ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். அவர் அதை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த பிறகு வெகு நாட்களுக்கு பிறகு ஒரு ப்ரொடக்ஷன் நிறுவனத்தில் ஒரு நாளைக்கு நான்கு ரூபாய் சம்பளத்தில் ராஜ்கிரனுக்கு ஒரு வேலை கிடைத்தது.

ராஜ்கிரண் செய்த உதவி:

அப்போது பணத்திற்கு மிகவும் கஷ்டம் என்பதால் சேமித்து வைத்து சாப்பாட்டிற்கு குறைவாக செலவு செய்து வாழ்ந்து வந்தார் ராஜ்கிரண். அதன் பிறகு நல்ல உயரத்தை அடைந்த ராஜ்கிண் சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் மக்களுக்கு குறை வைக்க கூடாது என முடிவு செய்து இருந்தார்.

இந்த நிலையில் ராஜ்கிரண் தயாரிப்பில் படங்கள் தயாரான பொழுது அந்த திரைப்படங்கள் அதிகபட்சம் கிராமப்புறங்களில்தான் படமாக்கப்பட்டன அப்பொழுது படவேலை பார்ப்பவர்கள் 200 பேர் இருந்தால் 300 பேருக்கு சேர்த்து சமைக்க சொல்லுவார் ராஜ்கிரண்.

ஏன் இப்படி சமைக்க சொல்கிறார் என பார்க்கும்பொழுது அந்த கிராமங்களில் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வருபவர்களுக்கும் சாப்பாடு போடுவாராம் ராஜ்கிரண். விஜயகாந்த் படக்குழுவில் வேலை பார்ப்பவர்களுக்கு சாப்பாடு போட்டால் அதையும் மிஞ்சி ராஜ்கிரண் படத்தை வேடிக்கை பார்க்க வருபவர்களுக்கு கூட உணவளித்திருக்கிறார்.

ராஜ்கிரண் வாழ்க்கையை சொல்லும் விதத்தில் எழுதிய பாடல்!.. கண் கலங்கிய ராஜ்கிரண்!.. எந்த பாட்டு தெரியுமா?

தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக இருந்து பிறகு இயக்குனராக தயாரிப்பாளராக நடிகராக என அனைத்து துறைகளிலும் தனது கால் தடத்தை பதித்தவர் நடிகர் ராஜ்கிரண்.  உழைக்கும் வர்க்கத்தில் உடல் அமைப்போடு கிராமத்து பாஷையோடு சினிமாவிற்கு வந்ததால் அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

முக்கியமாக பாமர மக்கள் அவரை ஒரு கதாநாயகனாக கொண்டாட தொடங்கினர். இந்த நிலையில் தொடர்ந்து கதாநாயகனாக பல வெற்றி படங்களை கொடுத்தார் ராஜ்கிரண். அதில் சில திரைப்படங்கள் அவரே தயாரித்தவை. அரண்மனைக்கிளி திரைப்படத்தைப் பொறுத்தவரை அவரே இயக்கி தயாரித்து நடித்த திரைப்படம் ஆகும். அந்த திரைப்படம் கொடுத்த வெற்றிதான் முக்கியமாக ராஜ்கிரனுக்கு தமிழ் சினிமாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

ராஜ்கிரன் கதாநாயகனாக நடித்த படங்களை விடவும் அப்பாவாக நடித்த திரைப்படங்கள் தான் தற்கால தலைமுறையினருக்கு ராஜ்கிரனை அறிமுகப்படுத்திய திரைப்படங்கள் என கூறலாம். இந்த நிலையில் அவர் நடித்த திரைப்படத்தில் முக்கியமான திரைப்படம் தவமாய் தவமிருந்து.

பார்ப்பதற்கு சேரனின் வாழ்க்கையை கூறுவது போன்ற படமாக தெரிந்தாலும் உண்மையில் அந்த படத்தின் கதாநாயகன் ராஜ்கிரண்தான் ராஜ்கிரணின் இளமை காலங்களில் துவங்கி அவரின் இறப்பு வரையில் உள்ள கதையை பேசும் படம்தான் தவமாய் தவமிருந்து.

அதில் ஒரே ஒரு ஊருக்குள்ள என்கிற ஒரு பாடல் மிகப் பிரபலமான பாட்டாகும். அந்த பாடலில் வரும் வரிகள் ராஜ்கிரணின் வாழ்க்கையை குறிப்பிடும் வகையில் எழுதப்பட்டிருந்தன. ராஜ்கிரண் சிறுவயதில் இருந்து இளமை காலங்கள் வரையிலும் தனது தாயால்தான் வளர்க்கப்பட்டார்.

அப்படி வளர்க்கப்படும் பொழுது கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாத வகையில் வளர்க்கப்பட்ட ராஜ்கிரண் முதன்முதலாக சென்னைக்கு வேலை தேடி வரும் பொழுதுதான் தான் ஏழை என்பதும் கஷ்டம் என்றால் என்ன என்பதையும் ராஜ்கிரண் அறிந்தார்.

அதை விளக்கும் வகையில் ஒரே ஒரு ஊருக்குள்ள என்கிற அந்தப் பாடலில் “செல்லம் ரொம்ப கொடுத்ததால வறுமை தெரியவில்லை” என பாடல் வரிகள் இடம்பெற்றிருந்தன. அந்த பாடல் வரிகளை முதல் முறை கேட்ட பொழுது ராஜ்கிரண் அழுதுவிட்டார் என்று கூறப்படுவதுண்டு. அந்த அளவிற்கு அவரது உண்மை வாழ்க்கையை விளக்கும் வகையில் அந்த பாடல் வரிகள் எழுதப்பட்டிருந்தன.

விஜயகாந்திற்கு முன்பே அதை செய்த ராஜ்கிரண்!.. தர்மம் பண்றதுல போட்டி போட்ட நடிகர்கள்…

தமிழ் சினிமாவில் கிராமத்து சாயலில் வந்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் தன்னை கதாநாயகனாக முன் நிறுத்திக் கொண்டவர் நடிகர் ராஜ்கிரண். வழக்கமான கிராமத்து ஆட்களுக்கு உடைய உடல் வாகுவுடன் பேச்சு வழக்குடன் சினிமாவிற்கு வந்ததால் அது கிராம மக்களிடையே எளிதாக அவரை பிரபலப்படுத்துவதற்கு உதவியாக இருந்தது.

பெரும்பாலும் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பிறகு பெரிய வள்ளல் என்று விஜயகாந்த்தைதான் கூறுவார்கள். ஏனெனில் விஜயகாந்த் அவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்திலும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தினமும் அசைவ சாப்பாடு போடக்கூடியவர்.

ஆனால் விஜயகாந்த்துக்கு முன்பே இந்த விஷயத்தை ராஜ்கிரண் செய்துள்ளார். ராஜ்கிரண் சினிமாவில் தயாரிப்பாளராக ஆன பிறகு அவர் தயாரித்த அனைத்து திரைப்படங்களிலும் அவர் என்ன சாப்பிடுகிறாரோ அதே சாப்பாட்டைதான் பட குழுவில் உள்ள அனைத்து நபர்களுக்கும் கொடுத்துள்ளார்.

ஏன் இதை செய்தார் என்று ஒரு பேட்டியில் கூறும் பொழுது நான் சிறு வயது முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை எனது அம்மா என்னை பணக்காரனை போல வளர்த்தார்கள். கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்தேன்.

ஆனால் படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி சென்னைக்கு வந்த பொழுதுதான் நாம் ஏழை என்பதே எனக்கு தெரிந்தது. சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்டேன் அப்பொழுதுதான் ஒரு விஷயம் தெரிந்தது. உலகத்திலேயே பெரிய தானம் என்பது சாப்பாடு கொடுப்பதுதான்.

எனவேதான் நான் அதை செய்து வருகிறேன் என்று ராஜ்கிரண் கூறியுள்ளார் விஜயகாந்த் பலருக்கும் உதவி செய்த விஷயம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும், ராஜ்கிரண் இப்படி ஒரு உதவி செய்யக்கூடியவர் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும்.

எனக்கு கொடுக்குற சம்பளத்துல ஏழைகளுக்கு வேட்டி வாங்கி கொடுங்க!.. பணம் வாங்காமல் நடித்த ராஜ்கிரண்!..

தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன காலம் முதல் மார்க்கெட் குறையாமல் இருக்கும் நடிகராக ராஜ்கிரண் இருக்கிறார். திரைப்பட விநியோகஸ்தராக இருந்த ராஜ்கிரண் முதலில் திரைப்படங்களை தயாரிக்கதான் ஆசைப்பட்டார்.

ஆனால் பிறகு அவரே திரைப்படங்களில் நடிக்கவும் துவங்கினார். கிராமத்து பாணியில் சரியாக கிராமத்து பாஷையை பேசும் நடிகராக இருந்ததால் அவருக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் உடனே வரவேற்பு கிடைத்தது.

இப்போது வரை சினிமாவில் ராஜ்கிரண் நடித்துக்கொண்டேதான் இருக்கிறார். அவரது நடிப்பு இப்போதும் மக்களுக்கு பிடித்த வகையில் இருக்கிறது. மக்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர் நடிகர் ராஜ்கரண்.

இப்படியிருக்கும்போது ராம்ராஜ் நிறுவனம் ஒருமுறை வேட்டி விளம்பரம் எடுப்பதற்காக ராஜ்கிரணை வந்து சந்தித்துள்ளது. அப்போது ராஜ் கிரண் இந்த விளம்பரத்திற்கு சரியாக இருப்பார் என்றும் அதற்காக ராஜ்கிரணுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தருவதாகவும் கூறினர்.

அதை கேட்ட ராஜ்கிரண் எனக்கு சம்பளம் கொடுத்துவிட்டு அதை வேட்டி விலையில் சேர்த்துவிடாதீர்கள். நான் சம்பளம் இல்லாமலே நடிக்கிறேன். ஆனால் அதற்காக வேட்டி விலையை குறைத்து விற்பனை செய்யுங்கள். அப்போதுதான் ஏழை மக்களும் வேட்டி வாங்கி உடுத்த முடியும் என கூறியுள்ளார்.

இந்த செய்தியை தமிழா தமிழா பாண்டியன் ஒரு நேர்க்காணலில் கூறியுள்ளார்.

ரெண்டு மணி நேரத்துல 7 பாட்டு, ஏழும் ஹிட்டு.. மாஸ் காட்டிய இளையராஜா..

இளையராஜாவை இசையின் அரசன் என அழைக்கப்படுவதை பலரும் கேட்டிருப்போம். தமிழ் சினிமாவில் இருப்பவர்களே இளையராஜாவிற்கு நிகரான ஒரு இசையமைப்பாளர் கிடையாது என கூறுவதுண்டு. அதற்கு உதாரணமாக பல விஷயங்களை இளையராஜா செய்துள்ளார்.

அதில் முக்கியமான ஒரு விஷயம் ராஜ்கிரண் நடித்த திரைப்படத்தில் நடந்தது. 1993 ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான திரைப்படம் அரண்மனை கிளி. ராஜ்கிரண் படத்திலேயே பயங்கரமான ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம். ராஜ்கிரணே நடித்து இயக்கிய திரைப்படம்.

இந்த படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்தார். ஏற்கனவே இளையராஜாவிடம் இதுக்குறித்து பேசி வைத்துவிட்டனர். ஆனால் இசையமைக்க இருந்த அந்த குறிப்பிட்ட நாளில் இளையராஜாவிற்கு வேறு வேலை இருந்தது. 10 மணிக்கு அவர் வெளியில் கிளம்ப வேண்டி இருந்தது.

எனவே ராஜ்கிரணை அழைத்து 7 மணிக்கெல்லாம் வர சொல்லிவிட்டார். மறுநாள் ராஜ்கிரணும் ஏழறை மணிக்கெல்லாம் பிரசாத் ஸ்டுடியோ வாசலில் போய் நிற்கிறார். உள்ளே சென்று பார்த்தால் ஏற்கனவே அங்கு இளையராஜா அமர்ந்துள்ளார்.

படத்தில் எத்தனை பாடலுக்கு இசையமைக்க வேண்டும் என கேட்டார் இளையராஜா. மொத்தம் 7 பாட்டு ஐயா என கூறியுள்ளார் ராஜ்கிரண். பிறகு ஒவ்வொரு பாடலுக்கும் ராஜ்கிரண் காட்சியை கூற வரிசையாக இசையமைத்துள்ளார் இளையராஜா. 9.30 மணிக்குள் 7 பாட்டுக்கும் இசையமைத்து அதை கேசட்டில் பதிவேற்றி ராஜ்கிரண் கையில் கொடுத்துவிட்டார்.

அந்த ஏழு பாடல்களுமே மாஸ் ஹிட் கொடுத்தன. இளையராஜா எவ்வளவு பெரிய இசை அரசன் என்பதை உணர்த்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்தது.

ஏண்டா ஐயாக்கிட்ட மரியாதை இல்லாம நடந்துக்குறியா! – உதவி இயக்குனரை அடிக்க சென்ற தனுஷ்..!

தமிழ் சினிமாவில் ராஜ்கிரண் முக்கியமான நடிகராவார். ராஜ்கிரண் அவர் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். நடிகர் வடிவேலுவை தமிழ் சினிமாவிற்கு ராஜ்கிரண்தான் அறிமுகப்படுத்தினார்.

இளமை காலங்களில் கதாநாயக நடித்தது மட்டுமின்றி தற்சமயம் துணை கதாபாத்திரத்திலும் கூட சிறப்பாக நடித்து வருகிறார் ராஜ்கிரண். சண்டைக்கோழி திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பா.. பாண்டி என்கிற திரைப்படத்தை தனுஷ் இயக்கினார். அந்த படத்தில் ராஜ்கிரணுக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராக பணிப்புரிந்தார். வேல்ராஜ் எப்போதும் மறுநாள் எந்தெந்த அறையில் படப்பிடிப்பு நடத்தப்பட போகிறதோ அங்கெல்லாம் முதல் நாளே லைட் வேலைகளை பார்த்துவிடுவார்.

இதனால் ஒரு ஷாட்டில் இருந்து அடுத்த ஷாட்டிற்கு போகும் நேரம் குறைவாகவே இருக்கும். ராஜ்கிரணுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உண்டு. இந்த ஷாட் மாறும் நேரத்தில் அவர் புகைப்பிடிக்க செல்வார். ஆனால் அவர் சிகரெட்டை முழுதாக பிடித்து முடிப்பதற்குள் அடுத்த ஷாட் தயாராகிவிடும்.

உடனே பாதியிலேயே சிகரெட்டை கீழே போட்டுவிட்டு நடிக்க சென்றுவிடுவார். இப்படி ஒருமுறை உதவி இயக்குனர் ராஜ் கிரணை அழைத்தபோது வழக்கம்போல அவர் சிகரெட்டை அணைத்துவிட்டு நடிக்க தயாரானார். இந்த நிலையில் இந்த நிகழ்வை தனுஷ் பார்த்துவிட்டார்.

வேகமாக உதவி இயக்குனரிடம் வந்தவர். என்னய்யா நீ ஐயாக்கிட்ட மரியாதை இல்லாம நடந்துக்குற என அடிக்க வந்துவிட்டார். அந்த அளவிற்கு ராஜ்கிரண் மீது மரியாதையாக இருந்துள்ளார் தனுஷ்.