ஆல் ஷோ ஹவுஸ்ஃபுல்.. ஒரு வாரத்துக்கு டிக்கெட் இல்ல..! – இப்பவே ரூ.200 கோடி வசூலை தாண்டிய லியோ!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் படம் லியோ. பல காலமாக தீவிர எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கும் இந்த படம் இன்னும் 3 நாட்களில் வெளியாகும் நிலையில் டிக்கெட் புக்கிங்குகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் ஒரு மாதம் முன்னரே டிக்கெட் புக்கிங் தொடங்கி திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆனதால் கூடுதல் ஷோக்கள் திரையிட அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் லியோ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. முக்கியமாக […]
சின்ன பிரச்சனைக்காக பல வருட பழக்கத்தை தூக்கி எறிந்த இளையராஜா!.. கை கொடுத்த ஏ.ஆர் ரகுமான்!..

தமிழ் சினிமாவில் தற்சமயம் கோடிகளில் சம்பளம் வாங்கும் பலரும் ஒரு காலத்தில் நம்மை போல் சாதரண ஆட்களாக இருந்தவர்கள்தான். பிறகு பெரும் போராட்டங்களை கண்டு கஷ்டப்பட்டுதான் இந்த நிலையை அடைந்துள்ளனர். ஆனால் பெரும் நிலையை அடைந்த பின்னர் பிரபலங்கள் பலரும் தாங்கள் கடந்து வந்த பாதையை மறந்துவிடுகின்றனர். இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து இவர்கள் மூவரும் தமிழ் சினிமாவிற்குள் வந்து மொத்த சினிமாவையும் புரட்டி போட்டார்கள் என்றே கூறலாம். மூவருமே கிராமத்தில் இருந்து சினிமாவிற்கு பல கனவுகளுடன் வந்தவர்கள். […]
வில்லனா நடிக்க போய் தலைல ரத்தம் வந்ததுதான் மிச்சம்!.. நடிகர் ரகுமானுக்கு நடந்த சங்கடம்

தமிழில் எல்லா நடிகர்களாலும் தொடர்ந்து எப்போதுமே ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருக்க முடியாது. சில நடிகர்கள் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்தாலும் கூட போக போக அவர்களுக்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டே செல்லும். அதற்கு பிறகு அவர்களுக்கு கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குறையும். இந்த நிலையில் அவர்கள் கதாநாயகனாக நடிப்பதை விட்டு துணை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்குவர். இப்படியான சம்பவம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே நடந்துள்ளது எனும்போது மற்ற நடிகர்களுக்கு நடப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இந்த நிலையில் நடிகர் ரகுமானும் […]
அந்த பொண்ணை பாட வைக்கலைனா உன்ன படத்தில் இருந்து தூக்கிடுவேன்!.. இசையமைப்பாளருக்கு வார்னிங் கொடுத்த எம்.ஜி.ஆர்!..

திரைத்துறையில் முடிசூடா மன்னனாக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் திரைத்துறையில் பிரபலமாக இருந்தப்போது அவர் நடிக்கும் படத்தில் எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதற்கான உரிமை அவருக்கு இருந்தது. எனவே எம்.ஜி.ஆர் படத்தில் வேலை பார்க்கும் பலரும் அவரிடம் பயபக்தியுடன் இருந்து வந்தனர். ஏனெனில் அவர்கள் செய்யும் சிறு தவறுக்கூட அவர்களுக்கு பட வாய்ப்பே இல்லாமல் செய்துவிடும் அபாயம் இருந்தது. அதே போல படத்தின் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என எந்த ஒரு விஷயத்திலும் எம்.ஜி.ஆரின் குறுக்கீடு இல்லாமல் இருக்காது. […]
தலைவர் 171 ரஜினிக்கு கடைசி படமா?.. பத்திரிக்கையாளர் கேள்விக்கு லோகேஷ் சொன்ன அதிர்ச்சி பதில்..

தற்சமயம் வளர்ந்து வரும் தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். தொடர்ந்து இவரது படங்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. தன்னுடைய மூன்றாவது திரைப்படமே நடிகர் விஜய்யை வைத்து இயக்கினார் லோகேஷ் கனகராஜ். அதனை தொடர்ந்து கமலை வைத்து இவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் லியோ திரைப்படமும் திரையரங்கிற்கு வர இருக்கிறது. அதற்கு அடுத்து ரஜினிகாந்தை வைத்து ஒரு திரைப்படம் […]
அந்த படத்தில் நடிக்கிறேன்னு விஜய் என்னை ஏமாத்திட்டாரு!.. வெளிப்படையாக கூறிய சேரன்..

குடும்ப படங்கள் எடுக்கும் தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சேரன். தொடர்ந்து குடும்ப பின்னணியில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டுதான் சேரனின் கதைகளங்கள் அமையும். அப்படியான திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியிலும் கூட ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. சேரன் நடித்து வெளியான தவமாய் தவமிருந்து திரைப்படம் இப்போதும் கூட மக்கள் மத்தியில் விருப்பமான படமாகும். இந்த நிலையில் காதலை மையப்படுத்தி சேரன் ஒரு கதையை எழுதினார். இந்த கதைக்கு ஒரு இளம் ஹீரோ நடித்தால் நன்றாக இருக்கும் என […]
மைக் மோகனுக்கும், விஜய்க்கும் பயங்கர சண்டை! – ரணகளமாகும் தளபதி 68!

லியோ படத்தை அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் 68வது படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்குகிறார். லியோ படமே இன்னும் வெளியாக நிலையில் தளபதி 68 படத்திற்கான ஷூட்டிங் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழ் சினிமாவில் 80, 90களில் பிரபலமான நடிகராக இருந்த மைக் மோகன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ’அவர் எப்படிப்பா வில்லன் கெட்டப்புக்கு செட் ஆவார்?’ என ஆரம்பம் முதலே பலருக்கும் […]
அந்த படத்துல சூர்யாவுக்கு நடிக்கவும் வரல.. ஒண்ணும் வரல… ஓப்பனாக கூறிய ரஜினிகாந்த்!.

தமிழில் ஒரு காலத்தில் விஜய், அஜித்திற்கு இணையாக ஒரு காலத்தில் போட்டி நடிகராக இருந்தவர் நடிகர் சூர்யா. விஜய், அஜித் இருவரும் காதல் படங்களாக நடித்து வந்த அதே காலக்கட்டத்தில் சூர்யாவும் உன்னை நினைத்து, பூவெல்லாம் கேட்டுப்பார் மாதிரியான படங்களில் நடித்து வந்தார். அந்த சமயத்தில் விஜய் அஜித்திற்கு இருந்த அதே அளவு ரசிக கூட்டம் சூர்யாவிற்கும் இருந்தது. அதை தாண்டி சூர்யா நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல கதாபாத்திரங்களை நடித்துள்ளார். பிதாமகன், மாயாவி போன்ற திரைப்படங்களை […]
கோபத்தில் விரக்தியில் எழுதின ஒரு கதை!.. என் வாழ்க்கையையே புரட்டி போட்டுடுச்சு!.. பேரரசுக்கு நடந்த சம்பவம்!..

தமிழ் சினிமா இயக்குனர்களில் குறைந்த காலமே இருந்தாலும் அவரது திரைப்படங்களுக்கு தனி பேரும் புகழும் உருவாக்கியவர் இயக்குனர் பேரரசு. தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என கனவோடு வந்த பல இயக்குனர்களில் பேரரசும் முக்கியமானவர். ஆரம்ப காலக்கட்டங்களில் எடுத்து உடனேயே இயக்குனராக வாய்ப்பு கிடைக்காது என்பதை அறிந்த பேரரசு, முதலில் சினிமாவில் மற்ற துறைகளில் பணிப்புரிந்து வந்தார். 15 வருட சினிமா அனுபவத்திற்கு பிறகு சினிமாவில் இயக்குனராக வாய்ப்பு தேட துவங்கினார். முதலில் அவர் எழுதிய கதைகள் […]
போட்டுகொடுத்து வாழ்க்கையை கெடுக்குறது இதுதான்.. தவறான பேச்சை கேட்டு உதவி இயக்குனரை விரட்டிய பாக்கியராஜ்!..

Bhagyaraj: பாக்கியராஜ் தமிழில் செல்வாக்கு மிக்க இயக்குனர்களில் முக்கியமானவர் ஆவார். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்த பாக்கியராஜ், சுவரில்லா சித்திரங்கள் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்தில் துவங்கி பாக்கியராஜ் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே ஹிட்டுதான். சொல்ல போனால் அப்போதிருந்த லோகேஷ் கனகராஜ் என பாக்கியராஜை கூறலாம். இதனால் பலரும் அவரிடம் உதவி இயக்குனராவதற்கு முயற்சி செய்து வந்தனர். பாக்கியராஜும் பலருக்கும் உதவி இயக்குனராக வாய்ப்பு கொடுத்து வந்தார். அப்படியாக பாக்கியராஜுடம் உதவி இயக்குனராக […]
தியேட்டர்காரங்க பண்றதை பார்க்கும்போதுதான் பயமா இருக்கு!.. இறுதிக்கட்ட பயத்தில் லோகேஷ் கனகராஜ்..

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் லியோ. லியோ திரைப்படம் வருகிற 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்சமயம் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன. இந்த நிலையில் படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக பல யூ ட்யூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முன்பெல்லாம் படத்தை ப்ரோமோஷன் செய்ய கதாநாயகர்கள்தான் பேட்டி கொடுப்பார்கள். ஆனால் இப்போது கதாநாயகர்கள் தரம் உயர்ந்ததால் இயக்குனர்கள் பேட்டி அளிக்க […]
முதல் 10 நிமிஷத்தை மிஸ் பண்ணிட்டா அவ்வளவுதான்!.. ரசிகர்களுக்கு லோகேஷ் வைத்த கோரிக்கை!..

வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. பீஸ்ட் திரைப்படம் வந்த காலக்கட்டம் முதலே ரசிகர்களுக்கு இந்த படத்திற்குதான் வெறித்தனமாக காத்திருந்தனர். இந்த நிலையில் சீக்கிரத்தில் படம் வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். விஜய் படம் என்பதை விடவும் லோகேஷ் கனகராஜ் படம் என்பதாலேயே படத்திற்கு அதிகமான வரவேற்பு உண்டாகியுள்ளதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும்போதும் லோகேஷ் கனகராஜ் அந்த படம் குறித்து […]