அந்த கேள்வி கேக்குறீங்க.. நீங்களும் ஒரு பெண் தானே..? நிருபரால் கடுப்பான தமன்னா.!
நடிகை தமன்னா தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று பழமொழிகளில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவிலும் மற்ற சினிமாவிலும் வரவேற்பு பெற்ற நடிகையாக இவர் இருக்கிறார்.
மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்கு அந்தந்த காலகட்டத்திற்கு தகுந்தார் போல ஏதாவது ஒன்றை செய்து தமன்னா தொடர்ந்து தனக்கான மார்க்கெட்டை பிடித்து வைத்திருக்கிறார்.
இந்திய அளவில் பார்க்கும் பொழுது நயன்தாராவை விட தமன்னாவிற்கு தான் ரசிகர்கள் அதிகம் என்று கூறலாம். இந்த நிலையில் தமன்னாவிற்கு ஆரம்பம் முதலே சிவபக்தி அதிகம்.

இந்த நிலையில் தற்சமயம் ஓதிலா 2 என்கிற ஒரு திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சிவசக்தி என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க இது ஒரு சாமி படம் என்று கூறப்படுகிறது.
அதில் கேள்வி கேட்ட பெண் நிருபர் ஒருவர் மில்கி பியூட்டி ஆக இருக்கும் தமன்னாவை எப்படி சாமி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு கோபமடைந்த தமன்னா உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. ஒரு சிவ பக்தர் ஏன் மில்கி ப்யூட்டியாக இருக்க கூடாதா என்று கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் நீங்கள் ஒரு பெண் நிருபர் தானே என்றும் கேள்வி கேட்டார் இதனால் பதற்றம் அடைந்த பெண் நிருபர் இல்லை நான் தவறான விதத்தில் இந்த கேள்வியை கேட்கவில்லை என பதிலளித்து இருக்கிறார்.