லீக் ஆன துணிவு திரைப்படம்? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தற்சமயம் தமிழ் சினிமாவில் ஹாட் டாப்பிக்காக இருக்கும் விஷயம் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள்தான். நாளை 11 ஆம் தேதி இந்த இரு படங்களும் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன.

தமிழ்நாட்டின் பெரும்பான்மையான ரசிகர்கள் விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்களே. எனவே தமிழகம் முழுவதும் முக்கால்வாசி திரையரங்குகள் ஏற்கனவே புக்கிங்கிலேயே ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டன.

அஜித் நடித்த துணிவு திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் கொஞ்சம் அதிக வரவேற்பு இருப்பதை பார்க்க முடிகிறது. ஏனெனில் இந்த படத்தை இயக்கிய ஹெச். வினோத் ஏற்கனவே நேர்க்கொண்ட பார்வை, தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர்.

இந்த நிலையில் இந்த படத்தின் ஹிட் பாடலான சில்லா சில்லா பாடலின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. துணிவு படக்குழு. ஏற்கனவே பெரும் காத்திருப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த ப்ரோமோ அமைந்துள்ளது.

ப்ரோமோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.

இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து சில காட்சிகள் சமூக வலைத்தளங்களில் லீக் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அந்த மாதிரியான காட்சிகளை பகிர வேண்டாம் என அஜித் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Refresh