ஒரு பக்கம் உடம்பு அப்படியே தேஞ்சி போச்சு!.. அப்பயும் கூட ஒரு சிறுவனை காப்பாற்றிய கமல்.. நிஜமாவே ஹீரோதான்!.

Kamalhaasan : தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிக்க கூடிய நடிகர் என்றால் அது கமல்ஹாசன் தான். எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்கள் தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில்தான் நடிப்பார்கள்.

ஒரு மாஸ் கதாநாயகனாக நடிப்பதற்கு அவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். ஆனால் அதைத் தாண்டி ஒரு புது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவர்கள் யோசிப்பார்கள். ஆனால் ஒரு பிச்சைக்காரனாகவோ திருடனாகவோ நடிக்க வேண்டும் என்றால் கூட யோசிக்காமல் நடிக்கும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் இரண்டு பேர்தான்.

kamalhaasan
kamalhaasan
Social Media Bar

அதில் ஒன்று சிவாஜி கணேசன் மற்றொன்று கமல்ஹாசன். கமல்ஹாசன் நடிப்பு எப்படிப்பட்டது என்பது குறித்து வையாபுரி கொடுத்துள்ள பேட்டி பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக இருக்கிறது.

அதில் வையாபுரி கூறும் பொழுது மும்பை எக்ஸ்பிரஸ் என்கிற கமலஹாசனின் திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து பணி புரிந்த அனுபவத்தை கூறியிருக்கிறார். மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தைப் பொறுத்தவரை மரணக்கிணறு என கூறப்படும் வித்தையை செய்யக்கூடியவராக கமல்ஹாசன் அதில் இருப்பார்.

கமல்ஹாசன் செய்த வித்தை:

அந்த படத்தில் ஒரு காட்சியில் ஒரு சிறுவனை வண்டிக்கு பின்னால் அமர வைத்து மரணக்கிணறு வித்தையில் வண்டியை எப்படி ஓட்டுவாரோ அதேபோல வண்டியை ஓட்டும் காட்சி ஒன்று இருந்தது. அந்த இரு சக்கர வாகனத்தை மிக உச்சகட்ட வேகத்தில் ஓட்டினால்தான் அந்த வித்தையை செய்ய முடியும்.

எனவே கமல்ஹாசன் அப்படி செய்து கொண்டிருந்த பொழுது அந்த வண்டியில் திடீரென்று இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனை அடுத்து வண்டியை நிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அந்த சிறுவனிடம் தன்னை கெட்டியாக பிடித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வண்டியை கீழே கொண்டு போய் தேய்த்து நிறுத்தி இருக்கிறார் கமல்ஹாசன்.

அதனால் அவரது உடலின் ஒரு பகுதி முழுக்க தரையில் தேய்ந்து விட்டது அந்த ரத்த காயங்களுடன் கூட வந்து எடுக்கப்பட்ட காட்சி சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார் கமல்ஹாசன்.

அதன் பிறகு அவரால் அமர்ந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லை பிறகு ஆம்புலன்சை அழைத்து வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அப்படி நடிப்பின் மீது அபாரமான ஈர்ப்பு கொண்டவர் கமல்ஹாசன் என்று வையாபுரி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.