Latest News
ரசிகர் அனுப்பிய ஒரு மெசேஜால் வந்த வினை!.. விவாகரத்தில் முடிந்த சீரியல் நடிகை வாழ்க்கை!.
தமிழில் அதிகமான சீரியல்களில் நடித்த நடிகைகளின் முக்கியமானவர் நடிகை சந்தியா. வம்சம், அத்திப்பூக்கள், சந்திரலேகா மாதிரியான நிறைய சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார்.
இவர் நடித்த சீரியலில் வம்சம் மிகப் பிரபலமான சீரியல் என்று கூறலாம். ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரமாக நடித்த சீரியல்தான் வம்சம். அந்த சீரியலில் ரம்யா கிருஷ்ணனுக்கு சமமான ஒரு கதாபாத்திரத்தில் சந்தியா நடித்திருந்தார்.
அதற்கு பிறகு வள்ளி என்கிற ஒரு நாடகத்திலும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். அத்திப்பூக்கள் நாடகத்தை பொருத்தவரை அதில் வாடகை தாய் கதாபாத்திரத்தில் அவர் நடித்து வெளிவந்த சீரியல் ஆகும்.
அந்த சீரியலிலும் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் இருந்தது. வெகு காலங்களாக இவர் சினிமாவில் இருந்து வந்தாலும் கூட படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு என்பது இவருக்கு பெரிதாக கிடைக்கவில்லை.
சீரியல் நடிகை சந்தியா:
இந்த நிலையில் திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் கணவரை பிரிந்தார் சந்தியா. அது அப்பொழுது பெரிதாக பேசப்பட்டது. ஏனெனில் படங்களில் கூட குடும்ப பாங்கான பெண்ணாக நடிக்கும் சந்தியா எதற்கு இவ்வளவு அவசரமாக விவாகரத்து செய்கிறார் கேள்வியாக இருந்தது.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவர் பேசும் பொழுது சந்தியா அதற்கு பதில் கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது நிச்சயதார்த்தம் அன்று எங்களுக்குள் சில பிரச்சனைகள் இருந்து வந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகு அதெல்லாம் சரியாகிவிடும் என்று நான் நினைத்தேன்.
அம்மாவும் இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று எடுத்துக் கொள்ளாதே என்று கூறிவிட்டார். ஆனால் பிறகு திருமணத்திற்கு பிறகு அதுதான் பெரிய பிரச்சனையாக இருந்தது என்கிறார் சந்தியா.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் நிச்சயதார்த்தம் எங்கள் இருவருக்கும் முடிந்த பிறகு எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. அவர் என்னுடைய போனை எடுத்து செக் பண்ணி எனக்கு வந்த மெசேஜ்களை எல்லாம் படித்தார்.
சொந்த வாழ்க்கை பிரச்சனைகள்:
அதில் ஏதோ ஒன்று பார்க்க கூடாததை பார்த்தது போல அவரது செயல்பாடுகள் இருந்தன .அப்படி என்ன பார்த்தார் என்று பார்க்கும் பொழுது என்னுடைய ரசிகர் ஒருவர் நான் சீரியலில் நன்றாக நடிப்பதாகவும் அழகாக இருப்பதாகவும் எனக்கு மெசேஜ் செய்திருந்தார்.
அதற்கு நான் பதில் கூட கொடுக்கவில்லை. ஆனால் அதை ஏதோ நான் பெரிய தவறு செய்து விட்டேன் என்பது போல அவர் என்னிடம் சண்டை போட்டார். சரி இதெல்லாம் நம் மீது உள்ள காதல் எல்லாம் செய்கிறார் என்று நான் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு எங்களுக்குள் அதுவே பெரிய பிரச்சனையாக இருந்தது. அதனால் தான் நாங்கள் விவாகரத்து பெற்றுக் கொண்டோம் என்று கூறுகிறார் சந்தியா.