பேன் இந்தியா லெவலில் தயாராகும் கமல் படம்! – மொத்தம் 8 ஹீரோவாம்!

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் வரிசையாக பெரும் பட்ஜெட் படங்களில் நடிக்க இருக்கிறார். தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து கொண்டுள்ளார்.

விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் வருவதற்கு இன்னும் கொஞ்சம் நாட்கள் ஆகும் என்பதால் அதற்கு ஓரிரு படங்களில் நடித்துவிடலாம் என யோசித்து வருகிறார் கமல். இந்த நிலையில் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித், ஹெச்.வினோத், வெற்றி மாறன் போன்ற இயக்குனர்களிடம் படம் நடிப்பது பற்றி பேசி வருகிறார்.

இதற்கு நடுவே இயக்குனர் மணிரத்னம் திரைப்படத்தில் வேறு கமல் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஒரு பேன் இந்தியா படமாக எடுக்க திட்டமிட்டுள்ளாராம் மணிரத்னம். அதனால் மொத்தமாக இந்த படத்தில் 8 பேர் கதாநாயகனாக நடிக்கிறார்களாம்.

ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும் நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களை ஒன்று திரட்டி இந்த படத்தை மணிரத்னம் இயக்க போவதாக கூறப்படுகிறது. அதற்கான முதல் கட்டமாக ஹிந்தியில் இருந்து ஷாருக்கானை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்து ஷாருக்கானிடம் பேச்சு வார்த்தை போய்க்கொண்டுள்ளதாம்.

தமிழில் இதுவரை எந்த படமும் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை படைக்கவே இல்லை. ஒருவேளை மணிரத்னம் அதற்கான ஒரு முயற்சியாக இதை செய்கிறாரோ என சினி வட்டாரத்தில் பேச்சுக்கள் உள்ளன.

Refresh