சுதந்திரம் போற்றும் தமிழ் படங்கள்!.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு கதை..!
தமிழ் சினிமாவில் வித்யாசமான கதை அம்சங்களைக் கொண்டு படங்கள் எடுக்கப்பட்டு அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும்.
அந்த வகையில் சமூக அக்கறை கொண்டு மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் தமிழில் பல படங்கள் வெளி வந்திருக்கிறது. இந்நிலையில் சுதந்திரம் போற்றும் தமிழ் படங்களை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியன் 1996

கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, நாசர், கவுண்டமணி, செந்தில், சுகன்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். மேலும் இந்த திரைப்படம் ஆஸ்காருக்காக பரிந்துரைக்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்திய நாட்டின் மேல் தேசப்பற்று கொண்ட ஒரு மனிதன் சுதந்திரத்திற்காக போராடுகிறார். சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியா லஞ்ச அதிகாரிகளால் பாதிக்கப்படுகிறது. வயதான இந்தியன் தாத்தா இதை எதிர்த்து இவ்வாறு போராடுகிறார் என்பது தான் கதை.
மதராசபட்டினம் (2010)

மதராசபட்டினம் 2010-ல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் ஆர்யா, எமி ஜாக்சன், நாசர் ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப் போகும் தருணத்தில் மதராசபட்டினத்தில் வசிக்கும் ஒரு சலவை தொழிலாளியான ஆர்யா அவரின் நற்குணங்களையும், வீர செயல்களையும் கவனிக்கின்ற ஆங்கிலேய கவர்னரின் மகளுக்கு ஆர்யா மீது காதல் ஏற்படுகிறது. இருவரும் காதலித்து வரும் வேளையில் ஆர்யா எமி ஜாக்சனுக்கு தாலி ஒன்றை கொடுக்கிறார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு இருவரும் பிரிகிறார்கள். 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்யாவிடம் இருந்து பெற்ற தாலியை திருப்பி கொடுக்க இந்தியா வரும் எமி. இவர் பிரிந்த பிறகு ஆர்யா திருமணம் செய்து கொள்ளாமல், இவரின் பெயரில் பல நற்பணிகளை செய்து வருகிறார். இதன் பிறகு ஆர்யாவின் சமாதியின் அருகே தன்னுடைய உயிரையும் துறக்கிறாள். தேசபக்தி மற்றும் காதல் கதை களமாக அமைந்திருக்கும் இந்த திரைப்படம்.
பரதேசி (2013)

இயக்குனர் பாலாவின் இயக்கத்தின் அதர்வா நடித்த திரைப்படம் பரதேசி. மேலும் இந்த திரைப்படம் உடை வடிவமைப்புக்காக தேசிய விருது பெறப்பட்டுள்ளது. வெள்ளையர்களை அடிமைப்படுத்திய காலத்தில்டீ எஸ்டேட்டில் மக்களுக்கு நடந்த கொடுமையை பேசும் படமாக அமைந்திருக்கும்.
ஆகஸ்ட் 16 1947

இந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், ஜேசன் ஷா, புகழ், ஜூனியர் எம்ஜிஆர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தன. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக அதாவது ஆகஸ்ட் 14 முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் சம்பவங்கள் தொடர்பான கற்பனை கதையை வைத்து எடுக்கப்பட்ட படமாகும். செங்காடு என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கௌதம் கார்த்திக் அந்த கிராமத்தில் ஆட்சி செய்யும் ஆங்கிலேய அதிகாரியும் அவரது மகனும் மக்களை கொடுமைப்படுத்துகின்றன. கிராம மக்கள் அனைவரும் அவர்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். இந்நிலையில் அந்த ஆங்கிலேயரிடமிருந்து தீபாலி என்ற தன் மகளை யாருக்கும் தெரியாமல் வளர்த்து வருகிறார். தீபாலியை காதலிக்கும் கௌதம் கார்த்திக் அவளை ஆங்கிலேரிடமிருந்து காப்பாற்ற முயற்சி செய்கிறான். இந்த முயற்சியில் அவன் வெற்றி பெற்றானா ஆங்கிலேயரிடமிருந்து கிராம மக்கள் சுதந்திரம் பெற்றார்களா என்பதை குறித்து எடுக்கப்பட்ட படமாகும்.
ஹே ராம் 2000

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஹே ராம். இந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசன், நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்திருப்பார். இந்த திரைப்படம் இரு மொழி திரைப்படம் இந்திய பிரிவினை மற்றும் மகாத்மா காந்தியின் படுகொலை ஆகியவற்றை கூறுவதாக அமைந்திருக்கிறது.