கூலி படத்துக்கு வந்த முதல் விமர்சனம்.. அனிரூத் கொடுத்த அப்டேட்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது பலரது ஆசையாக இருந்தது.

விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து ரஜினியும் லோகேஷும் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என சினிமா வட்டாரத்திலேயே குரல்கள் வர துவங்கின.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் முக்கால்வாசி வேலைகள் முடிந்துவிட்டன. வருகிற ஆகஸ்ட் மாதம் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளர் என்கிற முறையில் அனிரூத் இந்த படத்தை பார்த்துள்ளார்.

படத்தை பார்த்த அனிரூத் கூறும்போது கூலி திரைப்படத்தை முழுமையாக பார்த்துவிட்டேன். சிறப்பாக இருக்கிறது என கூறியுள்ளார். பெரும்பாலும் அனிரூத் அவர் இசையமைக்கும் எல்லா படத்துக்கும் இந்த மாதிரி கூறுவதில்லை.

அதே மாதிரி அனிரூத் புகழும் படங்கள் பெரும்பாலும் வெற்றியடைந்துவிடும். எனவே கூலி சிறப்பாக வந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.