News
நீங்க தனுஷை பாத்தீங்க… இல்லையே மச்சான்..! – க்ரேமேன் ட்ரெய்லர் கண்டு புலம்பும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் தற்போதைய மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் மட்டுமல்லாது இந்தி, ஹாலிவுட் வரை பிசியாக நடித்து வருகிறார்.

முன்னதாக பக்கிரி என்ற படத்தில் நடித்தவர் தற்போது தி க்ரேமேன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அவெஞ்சர் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர்களான ரஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ளனர்.
இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர்களான க்ரிஸ் எவான்ஸ், ரியான் கோஸ்லிங், அனா டெ அர்மாஸ் என ஒரு நடிக பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷும் நடித்துள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்தே தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் என ரசிகர்கள் உற்சாகமாக காத்திருந்தனர்,
இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தையே அளித்தது. ஏனென்றால் கர்ணனுக்கு பிறகு தனுஷின் எந்த படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இருந்தாலும் பரவாயில்லை என ட்ரெய்லருக்காக தீவிரமாக காத்திருந்தனர்.
நேற்று ட்ரெய்லர் வெளியான நிலையில் தனுஷை ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 2 நிமிடத்திற்கும் மேல் உள்ள படத்தின் ட்ரெய்லரில் தனுஷ் 20 நொடிகள் கூட காட்டப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த ரசிகர்கள் மாயி பட “வாம்மா மின்னலு” காமெடியை வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர். படத்திலாவது அதிக காட்சிகளுக்கு வருவாரா என காத்திருக்கிறார்களாம் ரசிகர்கள்.
