Connect with us

ஹீரோவாக நடிக்கவிருந்த ரஜினியை வில்லனாக மாற்றிய சிவக்குமார்!.. அப்பலாம் சிவகுமார்தான் கெத்து!.

rajinikanth sivakumar

Cinema History

ஹீரோவாக நடிக்கவிருந்த ரஜினியை வில்லனாக மாற்றிய சிவக்குமார்!.. அப்பலாம் சிவகுமார்தான் கெத்து!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் நடிகர்களில் பிரபலமானவராக நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார். சொல்லப்போனால் தமிழ் சினிமாவிலேயே டாப் நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் ஆனால் ரஜினிகாந்திற்கு திரை துறையில் வாய்ப்பு கிடைத்த பொழுது ஏற்கனவே பல நடிகர்கள் பெரும் நடிகர்களாக இருந்தனர்.

அப்படியாக ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்த காலகட்டத்தில் சிவகுமார் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக இருந்தார். இளைஞராக இருந்த நடிகர்கள் அப்போது குறைவு என்பதால் ஜெய்சங்கர் சிவக்குமார் போன்ற நடிகர்களுக்கு மக்கள் மத்தியிலும் இளம் பெண்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு இருந்ததால் அவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைத்து வந்தன.

கவிக்குயில் திரைப்படத்தில் கூட சிவகுமார் கதாநாயகனாக நடித்திருப்பார் துணை கதாபாத்திரத்தில்தான் அதில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். இந்த நிலையில் புவனா ஒரு கேள்விக்குறி திரைப்படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்கிற பேச்சு வெகு நாட்களாக சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது முதலில் இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தனர். இது குறித்து கமல்ஹாசனிடம் பேசிய பொழுது அவருக்கு எதனாலேயோ அந்த கதாபாத்திரம் பிடிக்காததால் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

அதன்பிறகு அப்போதுதான் அறிமுகமாகியிருந்த ரஜினியை அந்த திரைப்படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தனர் ரஜினியிடம் கதையையும் கூறினார்கள் ரஜினிக்கும் அந்த கதை பிடித்திருந்தது. இந்த நிலையில் படத்தில் வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் நீ யோசித்த பொழுது சிவகுமாரை நடிக்க வைக்கலாம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்று சிவகுமாரிடமும் சென்று பேசினர்.

அப்பொழுதுதான் அவர்களுக்கு ஒரு விஷயம் தோன்றியது சிவகுமார் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் கதாநாயகனாக இருப்பதால் அவரை கதாநாயகனாக நடிக்க வைத்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தார்கள் எனவே அந்த படத்தில் ரஜினிகாந்தை வில்லனாக மாற்றி சிவகுமாரை கதாநாயகனாக நடிக்க வைத்தனர்.

இருந்தாலும் கூட வில்லனாக நடிக்கும் காலங்களிலும் ரஜினிகாந்த் தனது தனிப்பட்ட நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுக் கொண்டுதான் இருந்தார்.

To Top