
தற்சமயம் நடிகர் விஜய் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படம் வருகிற பொங்கலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் அடுத்த படம் தளபதி 67. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தில் பெரும் ஹிட் கொடுத்துள்ளார்.
மேலும் சில மாதங்களுக்கு முன்பு அவர் இயக்கி வெளியான விக்ரம் திரைப்படமும் நல்ல வெற்றியை கண்டது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் படத்திற்கு அதிக எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த படத்தில் பெரும் முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக படக்குழுவிடம் இருந்து தகவல்கள் வந்தன. அதன்படி நடிகர் விஷாலை வில்லனாக நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே படத்தில் நடிகர் மிஸ்கின் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் தற்சமயம் இயக்குனர் மிஸ்கின் படத்தில் இருந்து விலக இருக்கிறார் என கூறப்படுகிறது. துப்பறிவாளன் இரண்டாம் பாகம் எடுக்கும்போது நடிகர் விஷாலுக்கும், மிஸ்கினுக்கும் சண்டையானது. இதனால் அந்த படம் இறுதி வரை திரைக்கு வரவே இல்லை.
எனவே விஷால் படத்திற்குள் வருவதால்தான் மிஸ்கின் படத்தை விட்டு செல்கிறார் என கூறப்படுகிறது.