அஜித் பண்ணுன வேலைதான் காரணமா!.. ரஜினிக்கு சாதகமாக அமைந்த சம்பவம்!..

ஒரே நேரத்தில் பல பெரிய படங்களை தயாரித்த காரணத்தினால் தற்சமயம் பெரும் நிதி அபாயத்தில் சிக்கியுள்ளது லைகா நிறுவனம். வெளிநாட்டிலும் அந்த நிறுவனத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அது தற்சமயம் தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பு நிறுவனத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம்.

ஒரே சமயத்தில் லால் சலாம் இந்தியன் 2, மற்றும் 3, விடாமுயற்சி, வேட்டையன் என பல படங்களை கமிட் செய்தது லைக்கா நிறுவனம் ஒவ்வொரு திரைப்படத்தின் தினசரி படப்பிடிப்பு செலவுகளே சில லட்சங்கள் செல்வாகும்.

இந்த நிலையில் இந்த செலவுகளை நிர்வகிக்க முடியாமல் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளதாம் லைக்கா நிறுவனம். இதனால் வெகு நாட்களாகவே அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பானது நடத்தப்படாமலேயே இருக்கிறது.

Rajini vettaiyan

இந்த நிலையில் கடுப்பான அஜித் அடுத்த படத்தில் நடிக்க சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தும் அடுத்து கூலி திரைப்படத்தில் நடிக்க இருப்பதால் அவரும் வேட்டையன் படத்தை விட்டு சென்று விடக்கூடாது என வேக வேகமாக அதன் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

இந்த மாதத்தோடு அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என கூறப்படுகிறது.