பழைய பாடலை தூசி தட்டிய மாணவிகள்! – ட்ரெண்டில் இருக்கும் தெம்மா.. தெம்மா.. தெம்மாடி பாடல்!

இணையத்தை பொறுத்தவரை எது எப்போது ட்ரெண்டிங் ஆகும் என்றே தெரியவில்லை. சில சமயங்களில் நாம் முன்பு கேட்டிராத பாடல் ஒன்று திடீரென ட்ரெண்ட் ஆவதை பார்க்க முடியும்.

கிருப.. கிருப என்ற பாடல் இடையில் ட்ரெண்டிங் ஆகி வந்தது. அதற்கு முன்பு வரை அந்த பாடலை யாருமே கேட்டிருக்க மாட்டோம். அதே போல தற்சமயம் ட்ரெண்டிங் வருகிறது இந்த பாடல். தெம்மா.. தெம்மா.. தெம்மாடி காத்தே எனும் இந்த பாடல் Rain Rain Come again எனும் படத்தில் இடம் பெற்றுள்ளது. தற்சமயம் மிகவும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

ட்ரெண்டிங் என்றால் அதற்கு ஒரு ஆரம்பபுள்ளி இருக்க வேண்டும் அல்லவா. கேரளாவை சேர்ந்த சில பெண்கள் ஒன்றிணைந்து இந்த பாடலுக்கு இரட்டை அர்த்ததத்தில் நடனம் ஒன்று ஆட அது முதல் நெருப்பு போல ட்ரெண்ட் ஆகி வருகிறது இந்த பாடல்.

அதிகமாக முதலில் பெண்கள் ஆட துவங்க, அதை தொடர்ந்து தற்சமயம் ஆண்களும் கூட அந்த பாடலுக்கு ஆட துவங்கியுள்ளனர். ஆனால் இந்த பாடலுக்கு ஆடுபவர்கள் அனைவருமே இரட்டை அர்த்தம் கொண்டு ஆடுவதால் இதற்கு எதிர்ப்புகளும் கூட வலுத்து வருகிறது.

Refresh