கட்சி குறித்து விஜய்யின் அதிரடி நடவடிக்கை..புஸ்ஸி ஆனந்தை வெளியே நிற்க வைக்க காரணம்?.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அவரது அரசியல் களம் என்பது சூடுப்பிடித்து வருகிறது. தொடர்ந்து விஜய்யும் கள பணியில் இறங்கி பல விஷயங்களை செய்து வருகிறார். போன வருட துவக்கத்தில்தான் விஜய் கட்சி துவங்குவதாகவே அறிவித்தார்.
ஆனால் ஒரு வருடத்திற்குள்ளாகவே விஜய்யின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் அரசியலுக்கு வந்து என்ன செய்ய போகிறார் என்று கேட்டவர்கள் எல்லாம் வாய் பிளக்கும் அளவில் விஜய்யின் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.
அதே போல நடிகர் விஜய்யின் மாநாடு அவரது அரசியல் எண்ட்ரியில் முக்கிய மைல் கல்லாக மாறியது. அதன் மூலமாக இப்போது விஜய்க்கு ஆதரவாக பலர் மாறியுள்ளனர். தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு எதிராகதான் விஜய்யின் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் தற்சமயம் விஜய் தனது கட்சி குறித்த முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்ந்தெடுப்பு நேற்று நடந்தது. த.வெ.க மாவட்ட நிர்வாகத்தை மொத்தமாக 120 ஆக பிரித்துள்ளது.
ஒவ்வொரு மாவட்ட நிர்வாகத்திற்கு கீழும் இரண்டு தொகுதிகள் இருக்கும் வகையில் இந்த அமைப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு நடந்தப்போது புஸ்ஸி ஆனந்த்தை விஜய் உள்ளே அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
கட்சியில் சிபாரிசு மற்றும் பணம் வாங்கி கொண்டு பதவிகள் கொடுக்கப்படுவதாக புரளிகள் கிளம்பியிருந்தன. அதை பொய் என நிரூபிக்கவே விஜய் அப்படி செய்ததாக ஒரு பக்கம் பேசப்படுகிறது.