அஜித் தவறவிட்ட ரெண்டு படங்களால் முன்னுக்கு வந்த இன்னொரு ஹீரோ.. யார் தெரியுமா?

சினிமாவில் ஒரு சில நடிகர்களின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும். இன்றளவும் அந்த திரைப்படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தால் அனைவரும் உட்கார்ந்து பார்க்கும் படியாக அந்த படத்தின் கதை மற்றும் நடித்திருந்த நடிகர், நடிகை மக்களின் மனதை விட்டு நீங்காமல் இருப்பார்கள்.

இந்நிலையில் அந்தப் படத்தைப் பற்றி இயக்குனரோ அல்லது மற்ற நபர்கள் யாராவது சில தகவலை கூறினால் அது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

அந்த வகையில் தான் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் அவருக்கு கிடைத்த இரண்டு படங்களைத் தவிற விட்டு அந்த படத்தில் மற்றொரு நடிகர் நடித்து தற்போது வரை அந்த திரைப்படத்திற்கான வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளது என்பது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது.

நடிகர் அஜித் தவறவிட்ட இரண்டு திரைப்படங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நேருக்கு நேர்

Nerukku Ner
Social Media Bar

நேருக்கு நேர் திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை வசந்த் இயக்கியிருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் சூர்யா, விஜய், சிம்ரன், கௌசல்யா ஆகியோர் நடித்திருந்தார்கள். ஆனால் இந்த படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகர் அஜித்.

ஆனால் அஜித் அதிக சம்பளம் கேட்டதால், இந்த படத்தில் சூர்யாவை நடிக்க வைத்துள்ளனர்.

கஜினி

kajini suriya

கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படம் கஜினி. இந்த திரைப்படத்தை ஏ. ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். சூர்யா, அசின், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த திரைப்படம் கடந்த 2008 ஆம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் ஹிந்திலும் வெளியானது. ஹிந்தியில் வெளியாகி அதிக வசூல் செய்த முதல் ரீமேக் திரைப்படம் என்ற பெயரும் பெற்றது. ஆனால் இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் அஜித்.

இந்த படத்தில் மொட்டை போட வேண்டும் என்பதால் நடிகர் அஜித் இந்த படத்திலிருந்து விலகிவிட்டார் என்ற செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த இரு படங்களிலும் நடிகர் அஜித் நடித்திருந்தால், அவரின் சினிமா வாழ்க்கைக்கு இந்த திரைப்படங்கள் ஒரு திருப்புமுனையாக இருந்திருக்கும் என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.