News
ப்ரிடேட்டரையே திரும்ப எடுத்து வெச்சிருக்க..? – ஆர்யாவை கலாய்த்த உதயநிதி!
ஆர்யா நடித்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘கேப்டன்’. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே அதை பார்த்த பலரும் பிரிடேட்டரை நினைவுப்படுத்துவதாக கூறி வந்தனர். படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெறாத நிலையில் சுமாரான அளவில் ஓடியது.

தற்போது இந்த படம் ஓடிடியிலும் வெளியான நிலையில் தொடர் ட்ரோல்களை சந்தித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த படம் குறித்து ஆர்யாவுடன் பேசிய விஷயங்களை ரெட் ஜெயண்ட் பட தயாரிப்பி நிறுவனத்தின் நிறுவனரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் ‘கேப்டன் படத்தை பாத்துட்டு போன் பண்ணுங்கன்னு ஆர்யா சொன்னார். நான் படத்த பாத்துட்டு போன் பண்ணவே இல்ல. அவரும் போன் பண்ணி எப்படி இருக்குன்னு கேக்கல. இப்போ சமீபத்துல போன் பண்ணப்போ கேட்டேன். ஏன்யா பிரிடேட்டரையே கூட திரும்ப எடுத்து வெச்சிருக்க வேண்டியதுதான.. உங்களுக்குலாம் இரக்கமே இல்லையான்னு கேட்டேன்’ என நகைச்சுவையாக கூறியுள்ளார்.
ஆனால் சக்தி சௌந்தர்ராஜன் முன்னதாக இயக்கி வெளியான படங்களான மிருதன், டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்கள் கூட பிரபல ஹாலிவுட் படங்களோடு கம்பேர் செய்து ரசிகர்களால் விமர்சனத்திற்கும், ட்ரோலுக்கும் உள்ளானது குறிப்பிடத்தக்கது.
