வெளியானது கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் டீசர்.. இதுதான் படத்தின் கதையாம்.. எம்.ஜி.ஆருடன் தொடர்புடைய கதை!..

தொடர்ந்து தமிழில் மக்கள் எதிர்பார்க்கும் வகையிலான திரைப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் நலன் குமாரசாமி. இவர் இயக்கிய சூது கவ்வும் திரைப்படம் ஒரு ட்ரெண்ட் செட் திரைப்படமாக தமிழ் சினிமாவிற்கு அமைந்தது.

அதற்கு பிறகு அதேபோல நிறைய திரைப்படங்கள் தமிழில் வர தொடங்கியது. அதற்கு சூதுக்கவ்வும் திரைப்படம் தான் ஆரம்ப புள்ளியாக இருந்தது. தொடர்ந்து அதிக இடைவேளை விட்டு படங்கள் எடுத்தாலும் கூட நலன்குமாரசாமி எடுக்கும் திரைப்படங்களுக்கான வரவேற்பு என்பது குறைவது இல்லை.

அந்த வகையில் அடுத்து நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் திரைப்படம் வா வாத்தியார். இந்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கிறார் பெரும்பாலும் கார்த்தி தேர்ந்தெடுக்கும் கதைக்களங்களும் இப்பொழுது மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதாக இருக்கிறது.

vaa vaathiyar
vaa vaathiyar
Social Media Bar

சமீபத்தில் அவர் நடித்த சர்தார், விருமன், பொன்னியின் செல்வன் மெய்யழகன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே அவருக்கு நல்ல வரவேற்பு தான் பெற்றுக் கொடுத்திருக்கின்றன. இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.

வா வாத்தியார் கதை:

சந்தோஷ் நாராயணன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் இந்த திரைப்படத்தின் டீசர் என்று வெளியானது வெளியான உடனே இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த படத்தின் கதை குறித்து ஏற்கனவே சில விஷயங்கள் வெளியாகியிருந்தது.

அதன்படி சிறுவயதில் இருந்தே கார்த்தியின் தந்தைக்கு எம்.ஜி.ஆரை மிகவும் பிடிக்கும். எனவே எம்ஜிஆர் படங்களாக போட்டு கார்த்தியை எம்ஜிஆர் மாதிரி வளர்க்க நினைக்கிறார் அவரது தந்தை. ஆனால் அதில் வரும் நம்பியார் கதாபாத்திரத்தை பார்த்து முழுக்க முழுக்க ஒரு கெட்டவனாக வளர்கிறார் கார்த்திக்

ஆனால் அவருக்கு உள்ளாகவே எம்ஜிஆரின் கதாபாத்திரமும் இருக்கிறது அவ்வப்போது அந்த கதாபாத்திரம் வெளிவரும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரம் வெளிவரும்பொழுது கார்த்திக் நல்லவராகவும் நம்பியாரின் கதாபாத்திரம் வரும்பொழுது கெட்டவராகவும் மாறுவது போன்ற கதை அமைப்புதான் வா வாத்தியாரின் கதை அமைப்பு என்று பேச்சுக்கள் இருந்தன அப்படியான கதை அமைப்பில் இந்த படம் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.