Connect with us

பட ஷுட்டிங் முடிஞ்சுட்டாம் –  வாரிசுக்கு எதிராக களம் இறங்கும் துணிவு

News

பட ஷுட்டிங் முடிஞ்சுட்டாம் –  வாரிசுக்கு எதிராக களம் இறங்கும் துணிவு

Social Media Bar

தளபதி விஜய் நடித்து அடுத்து வரவிருக்கும் வாரிசு திரைப்படத்தின் படமாக்க வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துள்ளது. வருகிற பொங்கலுக்கு அந்த படத்தை எதிர்ப்பார்க்கலாம் என கூறப்பட்டிருந்தது. இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார்.

அதே போல இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் துணிவு. வலிமை படத்தில் இயக்குனர் ஹெச்.வினோத்தின் கதையில் மாற்றங்கள் செய்ததால் வலிமை எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை என்கிற பேச்சு இருந்தது. ஏனெனில் அதற்கு முன்பு அவர் இயக்கிய சதுரங்க வேட்டை மற்றும் தீரன் போன்ற படங்கள் நல்ல வெற்றியை கொடுத்த படங்கள் ஆகும். 

இந்நிலையில் அவருக்கு இன்னொரு வாய்ப்பாக துணிவு திரைப்படம் அமைந்துள்ளது. படத்தின் போஸ்டர்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்துவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.

எனவே வாரிசு திரைப்படத்திற்கு எதிராக பொங்கல் அன்று துணிவு திரைப்படமும் வெளியாகலாம் என்கிற பேச்சு உள்ளது. விஜய், அஜித் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவது என்பது எப்போதாவது நடக்கும் சமச்சாரம் ஆகும்.

எனவே ஒருவேளை பொங்கலுக்கு இருப்படமும் ஒரே நேரத்தில் வெளியாகும் பட்சத்தில் ரசிகர்களுக்கு உண்மையான பொங்கல் திரையரங்கில்தான் இருக்கும் என பேசப்படுகிறது.

Bigg Boss Update

To Top