Connect with us

ஒன்றரை நிமிஷம் தொடர்ந்து ஆடணும் –  ரெண்டே டேக்கில் அசத்திய விஜய்

News

ஒன்றரை நிமிஷம் தொடர்ந்து ஆடணும் –  ரெண்டே டேக்கில் அசத்திய விஜய்

Social Media Bar

தமிழ் சினிமாவில் நடனத்திற்கு புகழ் பெற்ற நடிகர்களில் விஜய் முக்கியமானவர். பாலிவுட் நடிகர்கள் கூட வியந்து பேசும் அளவிற்கு பல படங்களில் தனது நடன திறமையை காட்டியுள்ளார். 

குருவி, போக்கிரி காலங்களில் இருந்த அளவிற்கு தற்சமயம் விஜய் நடனமாடுவதில்லை என்றாலும் கூட, இப்போதும் சில படங்களில் கடினமான நடனங்களை அவர் ஆடுவதை பார்க்க முடிகிறது.

வாரிசு படத்தில் வரும் ரஞ்சிதமே பாடலை விஜயே பாடியுள்ளார். இதனால் இந்த பாடலுக்கு மட்டும் தனி கவனம் செலுத்தி வருகிறார். இந்த பாடலில் ஒரு இடத்தில் ஒன்றரை நிமிடங்கள் தொடர்ந்து நடனமாடுகிற காட்சி வருகிறதாம்.

அதற்கான நடனத்தை டான்ஸ் மாஸ்டர் விஜய்க்கு சொல்லி கொடுத்துள்ளார். முதல் டேக்கிலேயே ஒன்றரை நிமிட டான்ஸையும் சரியாக ஆடி காட்டியுள்ளார் விஜய். ஆனால் கூட ஆடும் நபர் ஒருவர் பிழையாக ஆடியதால் அந்த காட்சி மறுபடியும் படமாக்கப்பட்டது. ஆக இரண்டே டேக்கில் கடினமான அந்த நடனத்தை ஆடி முடித்தார் விஜய்.

விஜய் இன்னும் ஒரு நல்ல டான்ஸராகவே உள்ளார் என படக்குழுவினர் அவரை புகழ்ந்துள்ளனர்.

Articles

parle g
madampatty rangaraj
shoji morimoto
To Top