வாரிசு, துணிவு ரெண்டு படமும் ஒரே தேதியில்! – இது பெரிய டிவிஸ்டு!

தற்சமயம் தென்னிந்திய சினிமாவில் அதிகமாக பேச்சில் இருக்கும் டாபிக் என்றால் அது துணிவு மற்றும் வாரிசாகதான் இருக்கும். துணிவு வாரிசு இரண்டுமே ஒன்றை ஒன்று போட்டிக்கொண்டு வெளியாக இருக்கிறது.

ஜில்லா, வீரம் திரைப்படங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் இந்த படத்தை போட்டி போட்டுக்கொண்டு வெளியிடுகின்றனர். இரண்டு படங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு மாறாக துணிவு, வாரிசு இரண்டு திரைப்படங்களுமே ஒரே நாளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்சமயம் வந்த தகவலின்படி வருகிற 11 ஆம் தேதி இந்த இரண்டு திரைப்படங்களுமே திரைக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் என்னவென்று பார்க்கும்போது வாரிசு, துணிவு இரண்டு படங்களுமே தெலுங்கிலும் வெளியாக உள்ளது. ஆனால் தெலுங்கில் இரண்டு முக்கிய படங்களான வால்ட்டர் வீரய்யா மற்றும் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய திரைப்படங்கள் ஜனவரி 12 மற்றும் 13 தேதிகளில் வெளியாகின்றன.

இந்த படங்களில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா இருவரும் நடிக்கின்றனர். எனவே துணிவு, வாரிசு படங்கள் தெலுங்கில் அந்த படங்களோடு போட்டி போட முடியாது என்பதால் அவைகளுக்கு ஒரு நாள் முன்பே ஜனவரி 11 அன்று இரண்டு திரைப்படங்களையும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Refresh