Connect with us

தளபதி 68 அப்டேட் சொன்னா விஜய் சார் திட்டுவாரு..! – அமைதி காக்கும் வெங்கட் பிரபு!

vengat prabhu vijay

Latest News

தளபதி 68 அப்டேட் சொன்னா விஜய் சார் திட்டுவாரு..! – அமைதி காக்கும் வெங்கட் பிரபு!

Social Media Bar

விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல தமிழ் சினிமாவே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இந்தப் படம் தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி கலெக்ஷன் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது. அதற்கு ஏற்றாற்போலவே படத்தின் ட்ரெய்லரும் அமைந்துள்ளது.

இந்தப் படத்திற்கு அடுத்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது 68 ஆவது படத்தை நடிக்க உள்ளார். வெங்கட் பிரபு இதற்கு முன்னர் அஜித்குமாரை வைத்து ’மங்காத்தா’ படம் மூலம் பெரும் ஹிட் கொடுத்தவர். அவரது குரூப்பே அஜித் ஃபேன் க்ரூப் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவர் விஜய்யுடன் இணைந்து படம் செய்வது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வெங்கட் பிரபு மங்காத்தா போல விஜய்க்கும் ஒரு ஆண்டிஹீரோ கதையை செய்யப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

சமீபத்தில் விஜய்யுடன் சுற்றி வந்த வெங்கட் பிரபு ஈக்குசலைசர்-3 படத்தை விஜய் பார்க்கும் போட்டோவை வெளியிடுவது போன்றவற்றை செய்து வந்தபோது பலரும் ’தளபதி 68 அப்டேட் சொல்லுங்க’ என்று அவரை நச்சரிக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் அப்டேட் போல சில விஷயங்களை அடிக்கடி வெங்கட் பிரபு லீக் செய்து வந்தாலும் தற்போது மிகவும் அமைதி காத்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டபோது பலரும் தளபதி 68 அப்டேட் கேட்க அதற்கு அவர் “முதல்ல லியோ படம் வரட்டும். அது ரிலீசான பிறகு தளபதி 68 அப்டேட் பத்தி பாக்கலாம். இப்ப ஏதாவது சொன்னா ’போற இடத்துல எல்லாம் அப்டேட் கொடுத்துட்டு இருக்க என்று விஜய் சார் திட்டுவாரு’ என்று கூறிவிட்டு நழுவியுள்ளார். இதனால் தளபதி 68 பற்றி எதுவும் அதிகம் பேசிக்கொள்ள வேண்டாம் என்று விஜய் வெங்கட் பிரபுவிடம் சொல்லி இருக்கலாம் என்று பேசிக் கொள்ளப்படுகிறது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top