Cinema History
விடுதலை படத்தை விஜய் சேதுபதிக்காக எடுக்க ஐடியாவே இல்ல! 8 நாள் கால் ஹீட்லதான் கூப்பிட்டோம்– பொசுக்குன்னு உண்மையை சொன்ன வெற்றிமாறன்!
கோலிவுட்டில் வெற்றி படங்களாக இயக்கி வரும் இயக்குனர்களில் வெற்றிமாறனும் ஒருவர். அவரது பெயருக்கு தகுந்தாற் போல தொடர்ந்து வெற்றிகளை மட்டும் கண்டு வருகிறார். மேலும் மக்களுக்கு வெற்றிமாறன் திரைப்படங்களின் மீது ஒரு எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.
அசுரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் வெற்றி மாறன் இயக்கி வரும் திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் இரு பாகங்களாக வர இருக்கிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்து பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் கூறும்போது “அசுரன் படத்தை முடித்த உடனேயே அடுத்த படத்தை நான் சூரிக்காக இயக்க வேண்டும் என்றுதான் முடிவெடுத்திருந்தேன். கதையை எழுதிவிட்டு பிறகு சூரியை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அந்த கதையை நான் எழுதியதே நடிகர் சூரிக்காகதான்.
அதில் வரும் இன்னொரு முக்கிய கதாபாத்திரமான வாத்தியார் என்கிற கதாபாத்திரத்தில் பாரதி ராஜாவை நடிக்க வைக்க திட்டமிட்டோம். ஆனால் அவருக்கு அது அவ்வளவாக செட் ஆகாததால் விஜய் சேதுபதியிடம் பேசினோம். அந்த கதாபாத்திரத்திற்கு மொத்தமே 8 நாள் கால்ஷீட் அளவுக்குதான் காட்சிகள் இருந்தன.
ஆனால் விஜய் சேதுபதி வந்த பிறகு அந்த கதாபாத்திரத்தை பெரிதாக்கியதால் 45 நாள் கால்ஷீட் தேவைப்படும் அளவிற்கு இரண்டாவது பெரிய கதாபாத்திரமாக விஜய் சேதுபதி கதாபாத்திரம் வந்துவிட்டது” என கூறியுள்ளார் வெற்றிமாறன்.