நம்பிக்கை விடாமுயற்சி… 4 நாட்களில் விடாமுயற்சி செய்துள்ள கலெக்ஷன்.!
வலிமை திரைப்படத்திற்கு பிறகு அந்த படம் போலவே அதிக எதிர்பார்ப்புக்கு நடுவே உருவான திரைப்படம்தான் விடாமுயற்சி. கடந்த இரண்டு வருடங்களாகவே விடாமுயற்சி திரைப்படம் மீது ரசிகர்களுக்கு அதிக ஆர்வம் இருந்து வந்தது.
இயக்குனர் மகிழ் திருமேனியின் படம்தான் விடாமுயற்சி என்பதும் அதற்கு முக்கிய காரணமாகும். இதற்கு முன்பு மகிழ் திருமேனி இயக்கிய மீகாமன், தடம், தடையற காக்க, கலக தலைவன் மாதிரியான திரைப்படம் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களாக உள்ளன.
எனவே அதே போல விடாமுயற்சியும் நல்ல படமாக இருக்கும் என்கிற நம்பிக்கை இருந்து வந்தது. ப்ரேக் டவுன் என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக்காகதான் விடாமுயற்சி திரைப்படம் எடுக்கப்பட்டது. அதை அப்படியே ஹாலிவுட் தரத்திலேயே செய்திருந்தார் மகிழ் திருமேனி.

இதனால் படத்தில் குறைவான அளவிலேயே ஆக்ஷன் காட்சிகள் இருந்தன. ஒரு பக்கம் அஜித் ரசிகர்களுக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தினாலும் ஜெனரல் ஆடியன்ஸ்க்கு இந்த படம் மிகவும் பிடித்துள்ளது. இந்த நிலையில் வெளியாகி நான்கு நாட்கள் ஆன நிலையில் 131 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது விடாமுயற்சி.
நாளுக்கு நாள் விடாமுயற்சியின் ஒரு நாள் கலெக்ஷன் என்பது அதிகரித்து வருகிறது. எனவே இன்னமும் அதிக வசூல் சாதனையை இந்த படம் படைக்கும் என தெரிகிறது.