விடாமுயற்சி படம் வருமா வருதா? உண்மையை கூறிய தயாரிப்பாளர்.. வெளிவந்த அப்டேட்..!
இப்போதெல்லாம் அஜித்தின் திரைப்படங்கள் வெளிவருவதில் சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. முன்பெல்லாம் விஜய் அஜித் திரைப்படங்கள் போட்டி போட்டு ஒரே நேரத்தில் வெளியாவதை பார்க்க முடியும்.
இறுதியாக வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் அப்படி வெளியானது அதற்குப் பிறகு அஜித்தின் நடிப்பில் எந்த திரைப்படமும் வரவில்லை ஆனால் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்தது.
அதற்கு பிறகு கோட் திரைப்படமும் வெளியாகிவிட்டது. இந்த காலகட்டங்களில் எல்லாம் அஜித் விடாமுயற்சி என்கிற திரைப்படத்தில் நடித்து வந்தார்.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் இந்த படம் வெளியாகாமலேயே இருந்து வந்தது படத்தின் படப்பிடிப்புகளே பல நாட்கள் நடந்து கொண்டிருந்தன.
படம் குறித்த முக்கிய அப்டேட்:
இந்த நிலையில் அந்த படம் முடிவடையாத நிலையில் அஜித் அடுத்து குட் பேட் அக்லி என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்காக சென்றுவிட்டார். இதனால் விடாமுயற்சி வெளி வருமா என்கிற சந்தேகம் உருவானது. இந்த நிலையில் தற்சமயம் விடாமுயற்சி குறித்து நல்லவிதமான அப்டேட் ஒன்று வெளி வந்திருக்கிறது.
அதாவது விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன. தற்சமயம் டப்பிங் வேலைகள் தொடங்கி இருக்கின்றன. அதனை வைத்து பார்க்கும் பொழுது கண்டிப்பாக பொங்கலுக்கு விடாமுயற்சி படத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.