விடாது கருப்பு இயக்குனரின் அடுத்த சீரிஸ்? – எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா சீரிஸ்?

சின்ன திரையில் தற்சமயம் குடும்ப அமைப்புகளை அடிப்படையாக கொண்டே அதிகப்பட்ச சீரியல்கள் வருகின்றன.  ஆனால் 90ஸ் களிலேயே சின்ன திரையை அழறவிட்ட சீரியல்தான் மர்மதேசம் சீரியல்கள். 

மர்மமான கதைகளத்தை கொண்டு வெப் சீரிஸ் போல அப்பொழுதே தமிழில் நாடகங்கள் எடுக்கப்பட்டான. அதில் மிகவும் பிரபலமான சீரிஸ் விடாது கருப்பு. சிறு தெய்வ வழிப்பாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரிஸ் இப்போது வரை தமிழில் மிகவும் பிரபலமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த சீரியலை இயக்கியவர்தான் இயக்குனர் நாகா. இவர் தற்சமயம் ஒரு வெப் சீரிஸை இயக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸ் பெரும் பொருட் செலவில் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. விடாது கருப்பு நாடகத்தை போலவே இதுவும் கூட மர்மமான கதை களத்தை கொண்ட கதை என கூறப்படுகிறது.

நடிகை தன்ஷிகா இதில் முக்கிய கதாபாத்திரமாக நடிப்பதாக கூறப்படுகிறது. எனவே ரசிகர்கள் மத்தியில் இந்த சீரிஸிற்கு மக்களிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது. விரைவில் இதுக்குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh