News
திரையரங்கு கதவை உடைத்த ரசிகர்கள்! – வைரலாகும் வீடியோ!
ரசிகர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பை அடுத்து தற்சமயம் வெளியாகி தற்சமயம் ஹவுஸ் ஃபுல் ஆகி வரும் திரைப்படங்களாக துணிவு மற்றும் வாரிசு உள்ளது.

இன்று படம் வெளியான நிலையில் திரையரங்குகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. சில திரையரங்குகளில் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கூட்டம் உள்ளது.
பொதுவாக தல தளபதி திரைப்படங்கள் என்றாலே சென்னையில்தான் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். சென்னை திரையரங்குகளில் அனைத்து திரையரங்குகளும் கோலாகளமாக இருக்கும். அதே சமயம் இந்த கோலாகளங்களுக்கு இடையே சில அசம்பாவிதங்களும் நடைபெறுவதுண்டு.
அதே போல தற்சமயமும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சென்னையின் முக்கிய திரையரங்கமான ரோஹினி திரையரங்கில் துணிவு மற்றும் வாரிசு இரு படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
ரசிகர்கள் அலைமோதி வருவதை கண்ட திரையரங்க ஊழியர்கள் அவர்களை கட்டுப்படுத்த திரையரங்க கதவை மூடியுள்ளனர். ஆனால் ரசிகர்கள் கதவை உடைத்துக்கொண்டு திரையரங்கிற்குள் நுழைந்துள்ளனர்.
தற்சமயம் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.
