Tamil Cinema News
அவர்கிட்ட கண்ணீர் விட்டு அழணும்..! தென்றல் துளசி யாருன்னு தெரியுமா? விஜய்க்கும் இவருக்கும் இப்படி ஒரு தொடர்பா?..
நடிகைகளை பொறுத்தவரை சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று இருந்து வருவது என்பது கடினமான காரியமாக இருந்து வருகிறது. எல்லா காலங்களிலும் நடிகைகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காக என்னவெல்லாமோ செய்கிறார்கள்.
ஆனாலும் வயது ஆக ஆக அவர்களுக்கு வாய்ப்புகள் குறைகின்றன. ஆனால் சீரியல் துறையை பொறுத்தவரை அது அப்படியே தழை கீழாக இருக்கிறது. வயது அதிகரிக்க அதிகரிக்கதான் அங்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கின்றன.
இதனால்தான் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காத பட்சத்தில் நடிகைகள் அடுத்ததாக தேர்ந்தெடுக்கும் துறையாக சீரியல் துறை இருக்கிறது. இப்படி சீரியல் மூலமாக இன்னமும் தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்து கொண்டவர்தான் நடிகை ஸ்ருதிராஜ்.
இவர் 1980 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவராவார். 15 வயதிலேயே இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் விஜய் நடித்த மாண்புமிகு மாணவன் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
அந்த திரைப்படத்தில் கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் நடித்தார் ஸ்ருதிராஜ். ஆனால் மாண்புமிகு மாணவன் படம் பெரிதாக வரவேற்பை ஏற்படுத்தி தரவில்லை. ஆனால் அந்த படத்தில் இருந்தே விஜய்க்கும் ஸ்ருதிராஜ்க்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்தது.
இருவரும் அண்ணன் தங்கை மாதிரி பழகி வந்தனர். ஆனால் அதற்கு பிறகு நடிப்பை விட படிப்புதான் முக்கியம் என சினிமாவை விட்டு விலகினார். பிறகு சீரியல் மூலமாக மீண்டும் சின்னத்திரையில் இவர் எண்ட்ரி கொடுத்தார்.
2009 ஆம் ஆண்டு தென்றல் சீரியலில் இவர் அறிமுகமானார். இந்த சீரியல் மூலம் இவருக்கு வரவேற்பு கிடைத்தது. இப்போதும் சீரியல்களில் இவர் தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால் விஜய்யுடன் இப்போது அதிகமாக பழக்கம் இல்லை.
இதுக்குறித்து அவர் கூறும்போது அவருக்கு இப்போது என்னை நியாபகமிருக்கா என தெரியவில்லை. ஆனால் இப்போதும் அவரை பார்த்தால் ஒரு தங்கையாக அவரிடம் கண்ணீர் விட்டு அழுது பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது என கூறியுள்ளார் ஸ்ருதிராஜ்.
